நிர்வாண ஆடிஷனை அம்பலப்படுத்திய நடிகை.. ஆபாச மெஸேஜ்களும்.. கொலை மிரட்டலும் வருவதாக புகார்!

சென்னை: ராஜ் குந்த்ரா நடத்திய நிர்வாண ஆடிஷனை அம்பலப்படுத்திய நடிகை சகாரிக்கா சோனா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார்.

ஆபாச படங்களை தயாரித்து வெளியிட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ரா கடந்த திங்கட்கிழமை கைது செய்யப்பட்டார்.

செவ்வாய்க்கிழமை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவருக்கு 23 ஆம் தேதி வரை போலீஸ் கஸ்டடி கொடுக்கப்பட்டது.

போலீஸ் கஸ்டடி நீட்டிப்பு

போலீஸ் கஸ்டடி நீட்டிப்பு

இந்நிலையில் நேற்று மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டார் ராஜ் குந்த்ரா. அப்போது 27ஆம் தேதி வரை போலீஸ் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரிடம் மும்பை போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கொலை மிரட்டல்

கொலை மிரட்டல்

இந்நிலையில் வெப் சீரிஸில் நடிக்க ராஜ் குந்த்ரா நிர்வாண ஆடிஷன் நடத்தியதை அம்பலப்படுத்திய மாடலும் நடிகையுமான சகாரிக்கா ஷோனா தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாக தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு ஆபாச மெஸேஜ்கள் வருவதாகவும் வேதனைப் பட்டுள்ளார்.

அடல்ட்ஸ் ஆபாச படம்

அடல்ட்ஸ் ஆபாச படம்

வெப் சீரிஸ்க்கான ஆடிஷனில் தன்னை ராஜ் குந்த்ரா நிர்வாணமாக நடித்து காட்ட சொன்னதாக ஓபனாக பேசினார் சகாரிக்கா. மேலும் அவர் அடல்ட்டுகளுக்கான ஆபாச படம் தயாரிப்பதையும் போட்டுடைத்தார்.

ஆபாச மெஸேஜ்கள்

ஆபாச மெஸேஜ்கள்

இதனை தொடர்ந்தே ராஜ் குந்த்ரா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் தான் பேசியதற்கு பிறகே தனக்கு ஆபாச மெஸேஜ்களும் கொலை மிரட்டல்களும் வருவதாக நடிகை சகாரிக்கா தெரிவித்துள்ளார்.

என்ன தவறு செய்தார்?

என்ன தவறு செய்தார்?

பல ஆன்லைன் பிளாட் ஃபார்ம்களில் இருந்து தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும் பல்வேறு நம்பர்களில் இருந்து தன்னை தொடர்பு கொள்ளும் நபர்கள் ராஜ் குந்த்ரா என்ன தவறு செய்தார் என தன்னை கேட்டு திட்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

போலீஸில் புகார்

போலீஸில் புகார்

சிலர் ஆபாசப் படங்களைப் பார்க்கிறார்கள் என்றும் அதனால் அவை தயாரிக்கப்படுகின்றன என்றும் சோஷியல் மீடியாக்களில் சிலர் தன்னிடம் கூறி வருவதாகவும் கூறியுள்ளார். மேலும் தனக்கு ஆபாச மெஸேஜ் அனுப்பியவர்கள் மற்றும் தனக்கு மரண அச்சுறுத்தல் விடுத்தவர்கள் அனைவர் மீதும் மும்பை போலீஸில் புகார் அளிக்க உள்ளதாகவும் சகாரிக்கா தெரிவித்துள்ளார்.

வைரலாகும் வீடியோ

வைரலாகும் வீடியோ

முன்னதாக கடந்த பிப்ரவரி மாதம் சகாரிக்கா வெளியிட்ட வீடியோ ஒன்றில் ராஜ் குந்த்ரா ஆபாச படங்கள் தயாரிப்பதாகவும் இதற்காக அவர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தார். தற்போது அந்த வீடியோ வைரலாகி வருகிறது.

லைவ்வில் காட்ட திட்டம்

லைவ்வில் காட்ட திட்டம்

இதனிடையே குந்த்ரா பாலியல் செயல்களை எதிர்காலத்தில் லைவ்வில் ஒளிபரப்ப திட்டமிட்டிருந்ததாகவும் போலீஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுதொடர்பாக சில எலெக்ட்ரானிக் ஆதாரங்களையும் மும்பை போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஒரு கைது

மேலும் ஒரு கைது

மேலும் தனது ஆபாச பட தயாரிப்பை பாலிவுட் சினிமாவை போல பெரிதாக்கவும் குந்த்ரா திட்டமிட்டிருந்ததாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதனிடையே மும்பை காவல்துறையினர் குந்த்ராவின் ஐடி நண்பரான ரியான் ஜே தர்பேவையும் கைது செய்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X