STR 49 படத்தில் இளம் இசையமைப்பாளர்.. சிம்புவை கடுப்பாக்கிய அனிருத்.. சர்ச்சை பாட்டுதான் காரணமாம்
சென்னை: தக் லைஃப் படத்தை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து படங்களில் பிஸியாக இருக்கிறார். தற்போது பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பது உறுதியானது. படப்பிடிப்பு பணிகளும் தீவிரமாக நடந்து வருகிறது. இதற்கிடையில் பிரபலமான இசையமைப்பாளரிம் இப்படத்திற்கு இசையமைக்க டேட் கேட்டபோது மறுத்துவிட்டாராம். இதனால், சிம்பு ராெம்ப அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது. நெருங்கிய நண்பரே இப்படி செய்ததைத்தான் அவரால் ஏற்கமுடியவில்லையாம்.
மாநாடு படத்தின் வெற்றிக்கு பிறகு வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் கொரோனா குமார் படத்தில் நடிப்பதாக கூறப்பட்டது. பின்னர் அப்படத்தில் இருந்து சிம்பு விலகினார். மேலும் ரூ.1 கோடி சம்பள பெற்றுள்ளதாக சிம்பு மேல் வழக்கு பாய்ந்தது. இப்படி சிம்பு நடிக்கும் படங்கள் சர்ச்சை அல்லது வழக்கு என்றே நீண்டுகொண்டே இருந்த நேரத்தில் தக் லைஃப் படத்தில் கமலுடன் இணைந்து நடிக்க கமிட் ஆனார். அதுவும் அவருக்கு பிடித்த இயக்குநர் மணிரத்னம் இயக்குவதால் நடிக்க சம்மதம் தெரிவித்தார்.

3 ஹீரோயின்கள்: தக் லைஃப் படத்தின் படப்பிடிப்பும் முடிந்து ரிலீசுக்கு தயாராகி உள்ளது. இப்படம் வரும் ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக இருக்கிறது. இந்நிலையில், பார்க்கிங் பட இயக்குநர் இயக்கும் எஸ்டிஆர் 49 படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியது. இப்படத்தில் மமிதா பைஜூ, கயாடு லோஹர், மிருணாள் தாஹூர் ஆகியோர் நடிப்பதாகக் கூறப்படுகிறது. டிராகன் படத்தின் வெற்றிக்கு பிறகு கயாடு லோஹர் மிகப்பெரிய பட்ஜெட் பெரிய ஸ்டார் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார். மமிதா பைஜூ, விஜய், தனுஷ், சூர்யா என பட்டியல் நீள்கிறது. படு பிஸியான நடிகையாக மாறிவிட்டார். இப்படத்தில் சிம்பு கல்லூரி வாத்தியாராக நடிப்பதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது, மிருணாள் தாகூர் - சிம்பு காம்பினேஷனும் நல்லா இருக்கும் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.
அனிருத் மறுப்பு: ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கிய பார்க்கிங் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தின் வெற்றிக்கு பிறகு விக்ரமுடன் இணைந்து ஒரு படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிம்பு நடிக்க இருக்கும் படத்தை இயக்குவது உறுதியானதால் சிம்புவின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அடுத்தடுத்து லைன் அப்பில் சிம்பு படங்களை கைவசம் வைத்திருக்கிறார். கல்லூரி, காதல், காமெடி டிராமா என கலகலப்பாக இருக்கும் படத்திற்கு அனிருத் இசையமைத்தால் நன்றா இருக்கும் என படக்குழு முடிவெடுத்திருக்கிறது. இதற்கு சிம்புவும் ஓகே சொல்லியிருக்கிறார்.

இந்நிலையில், எஸ்டிஆர் 49 படத்திற்கு இசையமைக்க அனிருத்திடம் கேட்டபோது முடியாது என மறுத்துவிட்டாராம். கூலி, ஜெய்லர் 2, நானி படம் என பிஸியாக இருப்பதாக கூறி மறுத்துவிட்டாராம். சிம்புவின் நெருங்கிய நண்பரான அனிருத்தா இப்படி செய்தது என கோலிவுட்டில் கிசுகிசுக்க தொடங்கிவிட்டனர். எஸ்டிஆர் 50 படத்திற்கு யுவன் தான் இசை என்பது உறுதியாகிவிட்டது. எஸ்டிஆர் 51 படத்திற்கு அனிருத் இசையமைக்க கேட்டதற்கும் மறுத்துவிட்டாராம். காரணம் தெரியாமல் இருக்கும் சிம்பு
மிகவும் அப்செட்டில் இருக்கிறாராம். 2016இல் வெளியான பிரேக் அப் பாடலின் சர்ச்சையால் தான் இசையமைக்க மறுக்கிறார் என்றும் கூறப்படுகிறது. ரஜினிக்கு பிடித்தமான படங்களில் இசையமைத்து நல்ல பெயர் எடுத்து வரும் அனிருத் மீண்டும் எஸ்டிஆர் உடன் இணைந்து சர்ச்சையில் சிக்கிக்கொள்வோம் என்ற பயம் வந்துவிட்டதாம். அதனால் தான் மறுத்துவிட்டார் என்றும் சினிமா விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
சாய் அபயங்கர்: கட்சி சேர ஆல்பம் படத்தின் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் சூர்யா, விக்ரம் போன்ற பெரிய நடிகர்களின் படங்களில் இசையமைக்க கமிட் ஆகியுள்ளார். தற்போது கோலிவுட்டில் அனிருத் இல்லாட்டி என்ன அதான் சாய் இருக்கிறாரே என அந்த பக்கம் தாவ தொடங்கிவிட்டனர். அனிருத் மறுதததால் STR 49 படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைக்க இருக்கிறாராம். விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கைவசம் நான்கு படங்கள் அவரிடம் இருக்கிறது. அவரும் இசையில் பெரிய புரட்சியை ஏற்படுத்துவார் என்றே நம்பப்படுகிறது.


Click it and Unblock the Notifications











