சிம்புவின் STR 49.. யார் இசையமைப்பாளர் தெரியுமா?.. வெளியானது செமயான அப்டேட்
சென்னை: சிம்பு இப்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை சினிமாவில் தொடங்கியிருக்கிறார். அதன்படி அவர் நடித்த மாநாடு திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அந்தப் படம் விமர்சன ரீதியாக பெரும் வரவேற்பை பெற்றது; அதேபோல் வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டு 100 கோடி ரூபாய் க்ளப்பில் இணைந்தது. மாநாடு படத்துக்கு பிறகு அவர் நடித்த வெந்து தணிந்தது காடு, பத்து தல ஆகிய படங்களும் அவருக்கு நல்ல ஹிட்டையே கொடுத்தன. அடுத்ததாக அவர் தேசிங்கு பெரியசாமி, அஸ்வத் மாரிமுத்து, ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் இயக்கங்களிலும் நடிக்கவிருக்கிறார்.
சிறு வயதிலிருந்தே சினிமாவில் நடித்துவரும் சிம்பு இதுவரை 40க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். இடையில் இரண்டு காதல் தோல்விகளை சந்தித்தார் அவர். இரண்டாவது காதல் தோல்விக்கு பிறகு ஆன்மீக வழியில் சென்ற அவர் சில காலங்கள் சினிமாவில் நடிக்காமல் இருந்தார். அதேசமயம் அவர் எப்போது மீண்டும் சினிமாவில் நடிப்பார் என்று ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார்கள். அந்தவகையில் அவர் வந்தா ராஜாவாதான் வருவேன், செக்கச்சிவந்த வானம் படங்களில் நடித்தார். அந்தப் படங்களில் அவர் ரொம்பவே பருமனாக காணப்பட்டார்.
தரமான கம்பேக்: அதனைப் பார்த்து ஒருதரப்பினர் கிண்டலும் செய்தார்கள். சூழல் இப்படி இருக்க எண்ணங்களை ஒருநிலைப்படுத்தி, உடல் எடையை குறைத்து ஈஸ்வரன் படத்தில் நடித்தார். அந்தப் படம் சரியாக போகவில்லை. அதனையடுத்து வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு படத்தில் நடித்தார். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. அதிலும் சிம்புவின் எனர்ஜியை பார்த்த ரசிகர்கள், அட நம்ம எஸ்டிஆர் பழையபடி வந்துட்டாரே என்று உற்சாகத்தோடு கூறினார்கள்.

செம பெயர்: அடுத்ததாக அவர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்தார். அந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது. அதனைத் தொடர்ந்து பத்து தல படத்தில் நடித்தார். அப்படம் சுமாரான வரவேற்பை பெற்றாலும் சிம்புவின் நடிப்புக்கு நல்ல பெயர் கிடைத்தது. சூழல் இப்படி இருக்க கமல் ஹாசனின் தயாரிப்பில் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 48ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார் சிம்பு. படத்தின் அறிவிப்பு வந்தாலும் ஷூட்டிங் இன்னும் தொடங்கியபாடில்லை.
தக் லைஃப்: இந்த சூழலில் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஸ்வீட் சர்ப்ரைஸ் அறிவிப்பு ஒன்று வந்தது. அதன்படி மணிரத்னம் இயக்கத்தில் கமல் ஹாசன் நடிக்கும் தக் லைஃப் படத்தில் கமிட்டானார் சிம்பு. அப்படத்தில் முக்கியமான ரோலை ஏற்றிருக்கிறார். படத்தின் டீசரிலும் சிம்புவின் கெட்டப்பும், நடிப்பும் அட்டகாசமாக இருந்தது. இந்தப் படத்தை முடித்துவிட்டு அஸ்வத் மாரிமுத்து, தேசிங்கு பெரியசாமி, பார்க்கிங் திரைப்பட இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோரின் படங்களிலும் நடிக்க கமிட்டாகியிருக்கிறார்.
எஸ்டிஆர் 49 அப்டேட்: ராம்குமாருடன் இணையும் படத்துக்கு தற்காலிகமாக எஸ்டிஆர் 49 என்று பெயர் வைக்கப்பட்டிருக்கிறது. இந்நிலையில் சித்திரை முதல் நாளான இன்று படத்தின் அப்டேட் வெளியாகியிருக்கிறது. அதன்படி படத்துக்கு சாய் அபயங்கர் இசையமைக்கிறார். அதனை சிம்பு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்துடன் கூறியிருக்கிறார். கட்சி சேர என்ற ஆல்பம் மூலம் பிரபலமான சாய் அபயங்கர் மீனாட்சி சௌதரியுடன் இணைந்து ஒரு ஆல்பத்தில் பணியாற்றி அதையும் ஹிட்டாக்கினார். இவர் பாடகி ஹரிணியின் மகன் ஆவார். இப்போது சினிமாக்களில் பிஸியாக ஆரம்பித்திருக்கும் அவர் சூர்யா 45 படத்துக்கும் இசையமைத்துவருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











