சூர்யா 45 எப்படி இருக்கும்?.. சென்சேஷனல் இசையமைப்பாளர் ஓபன் டாக்.. ரசிகர்கள் குஷி
சென்னை: சூர்யாவின் நடிப்பில் கடைசியாக வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய தோல்வியையும், ட்ரோலையும் சந்தித்தது. அடுத்ததாக கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படத்தில் நடித்து முடித்த சூர்யா; தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நடித்திருக்கிறார். இந்நிலையில் படம் குறித்து இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியிருக்கும் விஷயம் சமூக வலைதளங்களில் பயங்கரமாக ட்ரெண்டாகியிருக்கிறது.
தமிழ் சினிமாவின் திறமை வாய்ந்த நடிகர்களில் ஒருவர் சூர்யா. சினிமா பின்னணியுள்ள குடும்பத்திலிருந்து வந்திருந்தாலும் தன்னுடைய திறமையால் மட்டுமே இன்று கோலிவுட்டின் டாப் 10 நடிகர்களுள் ஒருவராக வலம் வந்துகொண்டிருக்கிறது. அவர் சிவா இயக்கத்தில் கங்குவா படத்தில் நடித்தார். ஞானவேல் ராஜா தயாரித்திருந்த அப்படத்தில் திஷா பதானி, நட்டி, கருணாஸ், போஸ் வெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். மிகப்பெரிய எதிர்பார்ப்பை படத்துக்கு தயாரிப்பாளரும், நடிகர் சூர்யாவும் ஏற்றிவிட்டார்கள். ஆனால் அந்தப் படம் பெரும் வெற்றியை பெறுவதற்கு பதிலாக படுதோல்வியை சந்தித்தது.
படத்துக்கு ஓவர் ஹைப்?: குறிப்பாக படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசியிருந்த ஞானவேல் ராஜா, 'டிசம்பர் மாதம் நடக்கும் கங்குவா படத்தின் சக்சஸ் மீட்டுக்கு வந்துவிடுங்கள்' என்று கூறினார். அதேபோல் இரண்டாயிரம் கோடி ரூபாயை படம் வசூலிக்கும் என்றும் ஞானவேல் ராஜா நம்பிக்கையுடன் தெரிவித்திருந்தார். ஆனால் அவர் சொன்னபடி எதுவுமே நடக்கவில்லை. அதுமட்டுமின்றி கங்குவா படத்தால் ஞானவேல் ராஜாவுக்கு பெரிய நஷ்டம் உண்டாகிவிட்டது என்றும் தகவல்கள் வட்டமடித்துக்கொண்டிருக்கின்றன.
கார்த்திக் சுப்புராஜுடன் ரெட்ரோ படம்: இதற்கிடையே கங்குவா படத்தை முடித்த கையோடு கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ரெட்ரோ படத்தில் நடித்தார் அவர். கடந்த மே ஒன்றாம் தேதி படமானது வெளியானது. பெரிய எதிர்பார்ப்போடு வெளியானாலும் சொல்லிக்கொள்ளும்படியான வரவேற்பை பெறவில்லை. அதேசமயம் தியேட்டரில் கிடைத்த ரெஸ்பான்ஸைவிடவும் ஓடிடியில் கொஞ்சம் அதிகமாகவேத்தான் இருந்தது.

சூர்யா 45: இதற்கிடையே ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் தனது 45ஆவது படத்திலும் நடிக்க கமிட்டானார் அவர். அந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக திரிஷா நடித்திருக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் படம் குறித்து பேசிய சாய் அபயங்கர், "சூர்யா 45 திரைப்படம் சூப்பராக போய்க்கொண்டிருக்கிறது. நான் படம் பார்ப்பதற்கு முன்னரே படம் பற்றி என்ன யோசனை எனக்கு வருகிறதோ அதற்கு தகுந்த மாதிரி இசையமைத்துவிடுவேன். பிறகு அவை அனைத்தையும் மிக்ஸ் செய்வேன்.
பெரிய படங்கள்: நான் வேலை செய்வது எல்லாமே பெரிய படங்கள் என்பதால் கொஞ்சம் மாஸாகத்தான் இசையமைப்பேன். சூர்யர்வின் இந்தப் படத்தில் மாஸ் எல்லாம் எப்படி இருக்க வேண்டும் என்பது நமது மனதுக்குள் இருக்கும். நான் சின்ன வயதிலிருந்தே பார்த்திருக்கிறேன். அதனால் சூர்யா 45 படத்தில் கண்டிப்பாக ஃபேன் பாய் மொமண்ட்ஸ் எல்லாம் இருக்கும். அதெல்லாம் சரியாக டெலிவர் செய்ய வேண்டும்" என்றார்.
அடுத்த படம்: இந்தப் படத்தை முடித்திருக்கும் சூர்யா அடுத்ததாக வாத்தி, லக்கி பாஸ்கர் ஆகிய படங்களை இயக்கிய வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக மமிதா பைஜு நடிக்க; ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் பூஜை சமீபத்தில்தான் ஹைதராபாத்தில் சிம்ப்பிளாக நடந்து முடிந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை முடித்துவிட்டு அவர் வெற்றிமாறனின் வாடிவாசலில் நடிப்பார் என்று தெரிகிறது.


Click it and Unblock the Notifications











