அந்தரத்தில் அசால்டாக டைவ் அடித்த சாய் தன்ஷிகா...இன்ஸ்டாகிராமில் குவியும் பாராட்டுக்கள்

சென்னை : 2009 ம் ஆண்டு ஜெயம் ரவி நடித்த பேராண்மை படத்தின் மூலம் தமிழில் நடிக்க வந்தவர் சாய் தன்ஷிகா. இவர் கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பட படங்களில் நடித்துள்ளார்.

 Sai dhanshikas womens day special action video post gets good response

பரதேசி, நில் கவனி செல், திறந்திடு சீசே, கபாலி, உரு, காத்தாடி, காலக்கூத்து உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். தற்போது யோகிடா என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஆக்ஷன் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்து வரும் சாய் தன்ஷிகா, அந்த வீடியோக்களை வெளியிட்டுள்ளார்.இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள 3 வீடியோக்களில் அந்தரத்தில் டைவ் அடுக்கும் ஸ்டண்ட் காட்சிகளில் நடிக்கும் காட்சிகளை அவர் பதிவிட்டுள்ளார். மகளிர் தின ஸ்பெஷலாக இந்த ஆக்ஷன் வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார்.

வீடியோக்களுடன் மகளிர் தின வாழ்த்து பதிவிட்டுள்ள சாய் தன்ஷிகா, தங்கள் தனித்துவத்திற்காக வலிமையாக, துணிச்சலாக, நம்பிக்கையுடன் போராடி வரும் பெண்கள் அனைவருக்கும் எனது மகளிர் தின வாழ்த்துக்கள்.

வாழும் உதாரணங்களாக இருக்கும் பெண்களுக்கும், அவர்கள் பயணத்தில் துணையாக இருக்கும் ஆண்களுக்கும் எனது வாழ்த்துக்கள். எனது அடுத்த படமான யோடா படத்திற்கான பயிற்சியில் ஈடுபட்டு வருகிறேன் என குறிப்பிட்டுள்ளார். சாய் தன்ஷிகாவின் இந்த ஆக்ஷன் வீடியோக்களுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X