தன்னை விமர்சித்த நடிகருக்கு சாய் பல்லவியின் பதில்!
Recommended Video

சென்னை : 'பிரேமம்' படத்தின் மூலம் அறிமுகமான சாய் பல்லவி தற்போது தான் ஏ.எல்.விஜய் இயக்கத்தில் 'கரு' என்கிற தமிழ்படத்தில் முதன்முதலாக நடித்துள்ளார்.
ஒரே நேரத்தில் தெலுங்கிலும் தயாராகும் இந்தப்படத்தில் நாயகனாக நாக சவுர்யா என்பவர் நடித்துள்ளார். இவர் சாய் பல்லவியின் நடவடிக்கைகளை சமீபத்தில் விமர்சித்திருந்தார்.
சமீபத்தில் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நாக சவுர்யா கலந்துகொள்ளாத நிலையிலும் அவரைப்பற்றி உயர்வாகவே பேசினார் சாய்பல்லவி.

சாய் பல்லவி
'கரு' படத்தில் நடித்தபோது சாய் பல்லவி செட்டில் ஓவர் பந்தா காட்டியதாகவும் தேவையில்லாத சின்ன சின்ன விஷயங்களில் கூட அடாவடியாக நடந்து கொண்டதாகவும் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார் நாக சவுர்யா.

இசை வெளியீட்டு விழா
சமீபத்தில் 'கரு' படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் நாக சவுர்யா கலந்துகொள்ளவில்லை. அவர் கலந்துகொள்ளாத நிலையிலும் அவரைப்பற்றி உயர்வாகவே பேசினார் ஹீரோயின் சாய்பல்லவி.

ஏன் சொன்னார்னு தெரியலை
பின்னர் நாக சவுர்யா உங்களைப் பற்றி இப்படி பேசியுள்ளாரே, என சாய் பல்லவியிடம் கேட்கப்பட்டதற்கு, அவர் இப்படி சொன்னது ஏன் என்று தெரியவில்லை என்றும், அப்படி சொன்னது அதிர்ச்சி தருகிறது என்றும் கூறியுள்ளார் சாய்பல்லவி.

நாக சவுர்யா திறமையானவர்
அதைத் தொடர்ந்து "நாக சவுர்யா மிகவும் திறமையான நடிகர். இனி அவர் என்னைப்பற்றி நல்ல அபிப்ராயம் கொள்வார் என நம்புகிறேன்" என பாசிடிவ்வாகவே பதில் அளித்து ஆச்சர்யப்படுத்தியுள்ளார் சாய்பல்லவி.

நானி கோபம்
இதற்கு முன்பு நானியுடன் சாய் பல்லவி 'மிடில் கிளாஸ் அப்பாயி' படத்தில் நடித்தபோது இதே போல ஒரு குற்றச்சாட்டு எழுந்து, இருவருக்கும் கருத்து வேறுபாடாகி நானி ஷூட்டிங் ஸ்பாட்டை விட்டு கிளம்பியதாகக் கூறப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











