வேற லெவல் ஓப்பனிங்.. சாய் பல்லவி, நாக சைதன்யா லவ் ஸ்டோரி முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

ஹைதராபாத்: இந்த ஆண்டு திரைப்படங்களை வெளியிட பல முன்னணி நடிகர்களும் பயந்து அடுத்த ஆண்டுக்கு ஒதுங்கிய நிலையில், நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடித்த லவ் ஸ்டோரி திரைப்படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷனை அள்ளியுள்ளது ஒட்டுமொத்த திரையுலகையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது.

இளைஞர்களை தாண்டி குடும்பங்களும் இந்த படத்தை காண தியேட்டர்களை நோக்கி படையெடுத்து வருவகின்றன.

அபார நடிப்பு

அபார நடிப்பு

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இருவரும் இந்த படத்தில் வேற லெவலில் நடித்துள்ளதாக ஏகப்பட்ட ரசிகர்கள் படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். காதல் கதைகள் என்றுமே கல்லா கட்டும் என்பதை மீண்டும் இந்த படம் நிரூபித்து இருக்கிறது.

கிளைமேக்ஸ் சொதப்பல்

கிளைமேக்ஸ் சொதப்பல்

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் பாதி மற்றும் இரண்டாம் பாதி என படம் முழுக்க சூப்பராக சென்ற நிலையில், கிளைமேக்ஸ் மட்டுமே மிகப்பெரிய ஏமாற்றத்தை கொடுத்ததாக ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.

வசூலில் பாதிப்பு இல்லை

வசூலில் பாதிப்பு இல்லை

சமீபத்தில் வெளியான பெரிய பட்ஜெட் திரைப்படங்களான பெல் பாட்டம், தலைவி உள்ளிட்ட படங்கள் வசூல் செய்ய முடியாமல் சொதப்பிய நிலையில், சேகர் கம்முலா இயக்கத்தில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் நேற்று வெளியான லவ் ஸ்டோரி திரைப்படம் கொரோனாவுக்கு பிறகு நல்ல ஓப்பனிங் கொடுத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

10 கோடி

10 கோடி

கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான தலைவி திரைப்படம் முதல் நாள் வசூலாக ஒரு கோடி ரூபாயை கூட தாண்டாத நிலையில், லவ் ஸ்டோரி திரைப்படம் முதல் நாளே 10 கோடி ரூபாய் வசூலை பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மட்டுமே 6 முதல் 8 கோடி ரூபாயை இந்த படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

முதல் வாரத்தில்

முதல் வாரத்தில்

வெள்ளிக்கிழமை நல்ல வசூல் உடன் தொடங்கிய இந்த படம் ஏற்கனவே சனி மற்றும் ஞாயிறு என வார இறுதி நாட்களில் 80 சதவீத புக்கிங் உடன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. முதல் வார முடிவில் 30 முதல் 35 கோடி வரை படம் வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா சர்ச்சை

சமந்தா சர்ச்சை

நாக சைதன்யா மற்றும் சமந்தா இடையே எழுந்துள்ள சர்ச்சைகள் ஒரு பக்கம் முற்றி வரும் நிலையில், லவ் ஸ்டோரி படத்தின் ரிலீஸ் டின்னர் பார்ட்டிக்கு சமந்தாவை நாக சைதன்யா அழைக்கவே இல்லை என்றும் ஏகப்பட்ட சர்ச்சைகள் வெடித்து வருகின்றன.

தைரியமாக ரிலீசாகும்

தைரியமாக ரிலீசாகும்

டோலிவுட்டில் லவ் ஸ்டோரி திரைப்படம் நல்ல ஓப்பனிங் கொடுத்துள்ள நிலையில், இயக்குநர் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் பொங்கலுக்கு மகேஷ் பாபுவின் சர்காரு வாரி பாட்டா உள்ளிட்ட படங்களும் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் திரையரங்குகளில் திருவிழா கொண்டாட்டம் களைகட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X