சாய்பல்லவி - நாகசைதன்யா நடிப்பில் உருவாகியிருக்கும் "லவ் ஸ்டோரி" ட்ரைலர் வெளியானது!
சென்னை : நடிகை சாய் பல்லவி இப்பொழுது தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டுள்ளார். தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார்.
காதல் படங்களை இயக்குவதில் வல்லவரான இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் சாய்பல்லவி இரண்டாவது முறையாக இணைந்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படத்தில் ஹீரோவாக நாகசைதன்யா நடித்துள்ளார்.
திகட்டாத காதல் திரைப்படமாக உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகி பெரும் கவனத்தைப் பெற்று வருகிறது

தெலுங்கில் முன்னணி ஹீரோயின்
ப்ரேமம் மூலம் கதாநாயகியாக அறிமுகமான நடிகை சாய் பல்லவி இப்பொழுது தென்னிந்தியாவில் முன்னணி ஹீரோயினாக பிஸியாக படங்களில் நடித்து வருகிறார். மற்ற நடிகைகளைப் போல் கவர்ச்சிக்கு முக்கியத்துவம் தராமல் கதைக்கும் கதாபாத்திரங்களுக்கும் மட்டும் முக்கியத்துவம் கொடுத்து மிகச்சிறந்த படங்களை தொடர்ந்து கொடுத்து வருகிறார்.

லவ் ஸ்டோரி
குறிப்பாக தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்று வருவதால் டோலிவுட்டில் இவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அந்த வகையில் இப்போது நாக சைதன்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்துள்ளார். திகட்டாத காதல் படங்களை இயக்குவதில் வல்லவரான சேகர் கம்முலா இயக்கத்தில் உருவாகியுள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு பின் கொரோனாவால் திரையரங்குகள் மூடப்பட்டதால் தேதி மீண்டும் மீண்டும் தள்ளிவைக்கப்பட்டுக் கொண்டே இருந்தது. இந்நிலையில் இப்படம் செப்டம்பர் 27ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

காதலுக்கு எதிர்ப்பு
நாக சைதன்யா மற்றும் சாய்பல்லவி முதல் முறையாக இணைந்திருக்கும் லவ் ஸ்டோரி 2 மிடில் கிளாஸ் காதலர்களுக்குள் நடக்கும் வாழ்வியல் போராட்டத்தை பற்றிய படமாக உருவாகி உள்ளது. இருவரும் ஒவ்வொரு துறையில் தங்களது திறமையை நிரூபிக்க போராடிக் கொண்டிருக்க , இருவருக்கும் நடனத்தில் மிகப்பெரிய ஆர்வம் இருக்கிறது. இவர்களது காதலுக்கு இருதரப்பு வீட்டாரிடம் இருந்தும் எதிர்ப்புகள் கிளம்ப அதையெல்லாம் தாண்டி எப்படி வாழ்க்கையில் சாதிக்கிறார்கள் என்பதைப் பற்றிய திகட்டாத காதல் படமாக உருவாகியுள்ள லவ் ஸ்டோரி படத்தின் ட்ரைலர் தற்பொழுது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நாக சைதன்யாவுக்கு சாய்பல்லவிக்கும் இடையே காதல் காட்சிகள் மிக அட்டகாசமாக பொருந்தி இருக்கிறது.

ட்ரைலர் வெளியானது
சாய் பல்லவி ஏற்கனவே சேகர் கம்முலா இயக்கத்தில் நடித்திருந்த ஃபிடா மிகப்பெரிய வெற்றி பெற்றது. இப்பொழுது இரண்டாவது முறையாக சேகர் கம்முலா இயக்கத்தில் லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். தேவயானி, ஈஸ்வரி ராவ் இதில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். பவன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அமிகோஸ் கிரியேஷன்ஸ், ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் இப்படத்தை இணைந்து தயாரித்துள்ளது. பெரும் எதிர்பார்ப்பில் வெளியாகியுள்ள இப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications











