மீண்டும் இணையும் சூப்பர் ஜோடி.. ஷாம் சின்ஹா ராய் பட அப்டேட் !

ஹைதராபாத் : தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்படத் துறையில் முன்னணி நடிகையாக வலம் வரும் சாய்பல்லவி மீண்டும் நடிகர் நானியுடன் ஜோடி சேர்கிறார்.

மிடில் கிளாஸ் அப்பாயி படத்தை தொடர்ந்து இப்போது மீண்டும் இவர்கள் இணைய போகிறார்கள் என்ற செய்தியை கேட்ட அவரது ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளனர்.

நானி நடித்த ஜெர்ஸி மற்றும் கேங் லீடர் போன்ற படங்கள் சமீபத்தில் சூப்பர் ஹிட்டான நிலையில் இந்த செய்தியில் திரை வட்டாரத்தில் அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்தி வருகிறது.

மிகப்பெரிய வெற்றி

மிகப்பெரிய வெற்றி

பிரேமம் படத்தின் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாய் பல்லவி. இப்படம் கொடுத்த அறிமுகம் இவருக்கு பல மொழிகளில் மிகப்பெரிய அடையாளத்தை பெற்று தந்தது. மேலும் இந்த படம் மலையாளத்தில் வெளியான நிலையில் மற்ற மொழிகளிலும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடைந்து அங்கும் பிரேமம் ரீமேக் செய்யப்பட்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுத் தந்தது.

வித்தியாசமாக

வித்தியாசமாக

தமிழ், தெலுங்கு, மலையாளம் என தனது அடுத்தடுத்த படங்களை மிக முக்கியமான கதைகளுடன் சிறந்த கதாபாத்திரங்களை பார்த்து பார்த்து தேர்ந்தெடுத்து நடித்து வரும் சாய் பல்லவி மற்ற நடிகைகளிடம் இருந்து கதைகள் தேர்ந்தெடுப்பதில் சற்று வித்தியாசமாக காணப்படுகிறார்.

ராணா உடன்

ராணா உடன்

இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பு இவரது பிறந்தநாள் அன்று இவர் ராணா உடன் இணைந்து நடித்து வரும் விராட்ட பர்வம் படத்தின் போஸ்டர் வெளியிடப்பட்டு வந்த நிலையில் இப்போது தெலுங்கில் இவர் நானியுடன் இரண்டாம் முறையாக மீண்டும் இணையப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மீண்டும் கூட்டணி

மீண்டும் கூட்டணி

2017 ஆம் ஆண்டு வெளியான மிடில் கிளாஸ் அப்பாயி என்ற படத்தில் நானியுடன் முதன்முதலாக நடித்திருந்தார். ஆக்சன் மற்றும் காமெடி கலந்த படமாக வெளிவந்த மிடில் கிளாஸ் அப்பாயி படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சுமார் 100 கோடியை வசூலித்து மிகப் பெரிய ஹிட்டானது. இந்த வெற்றிக் கூட்டணி மீண்டும் எப்போது இணையப் போகிறது என ரசிகர்கள் அனைவரும் காத்துக் கொண்டிருந்த வேளையில் இப்பொழுது அதற்கான அப்டேட் வந்துள்ளது.

25வது படம்

25வது படம்

மேலும் நானி நடிப்பில் வி மற்றும் டக் ஜெகதீஷ் என இரண்டு படங்கள் இந்த ஆண்டு அடுத்தடுத்து வெளியாக உள்ளது. இதில் நானியின் 25வது படமான வி படத்தின் டீசர் சில நாட்களுக்கு முன்பு வெளியாகி ரசிகர்களை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த நிலையில், இந்த படத்தில் நானி முதன்முதலாக ஒரு டார்க் கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதுபோன்ற டார்க் கதாபாத்திரங்களில் நானி நடிப்பது இதுவே முதல் முறையாகும். மேலும் டக் ஜெகதீஷ் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் இந்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

மீண்டும் ஜோடி

மீண்டும் ஜோடி

சாய்பல்லவியும் ராணா உடன் விராட்ட பர்வம் என்ற படத்தில் நடித்து வரும் நிலையில் தற்போது இரண்டாம் முறையாக ஷாம் சின்ஹா ராய் என்ற படத்தில் நானியுடன் இணைவதாக வந்த தகவலை அடுத்து அனைவரும் ஆனந்தத்தில் ஆழ்ந்துள்ளனர். மேலும் இந்த ஷாம் சின்ஹா ராய் படத்தை டாக்ஸி வாலா படத்தை இயக்கிய இயக்குனர் ராகுல் இந்த படத்தை இயக்கியுள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X