விருது வாங்க வராத சைந்தவி.. சாய் பல்லவியும் பார்த்திபனும் யாருக்கு உதவுறாங்கனு பாருங்க!
சென்னை: தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் 2022 நேற்று அதாவது 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி 13ஆம் தேதி நடைபெற்றது. இதில் கடந்த 2016ஆம் ஆண்டு முதல் 2022ஆம் ஆண்டு வரை வெளியான சிறந்த தமிழ் படங்களுக்கும் அதில் பணியாற்றிய கலைஞர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டது. இந்த விருது வழங்கும் விழாவில் பல சுவாரஸ்யமான சம்பவங்களும் நடைபெற்றது. அதில் ஒரு சம்பவம் தான் பின்னணி பாடகி சைந்தவி அசுரன் படத்திற்காக தேர்வு செய்யப்பட்டார்.
அசுரன் படத்தில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவான எள்ளு வயல் பூக்களையே என்ற பாடலை பாடியதற்காக அவருக்கு சிறந்த பின்னணிப் பாடகி விருது அளிக்கப்பட்டது. இந்த விருதை வாங்க சைந்தவி வரவில்லை. மாறாக அவரது தாயாரை அனுப்பி வைத்திருந்தார். அவரது தாயாரும் விருதை வாங்க நேற்றைய நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

சைந்தவியின் தாயார்: அப்படி கலந்து கொண்ட அவரது தயார் விருது வாங்க மேடை ஏறும் போது லேசாக தடுமாறினார். இதைப் பார்த்த நடிகை சாய் பல்லவி மற்றும் இயக்குநர் பார்த்திபன் என இருவரும் டக்கென ஓடி வந்து சைந்தவியின் தாயாரை தாங்கிப் பிடித்தனர். இது தொடர்பான விடியோவை சைந்தவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இவர் பகிர்ந்துள்ள இந்த வீடியோ ரசிகர்கள் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. ரசிகர்கள் பலரும், சாய் பல்லவி மற்றும் பார்த்திபனை பலரும் பாராட்டி வருகிறார்கள்.
மற்ற சம்பவங்கள்: இது மட்டும் இல்லாமல், இந்த நிகழ்ச்சியில், சூர்யாவுக்கு வழங்கப்பட்ட விருதானது, சிறந்த இசைக்கு என்று ஏ.ஆர். ரகுமானுக்கு தயார் செய்யப்பட்ட விருதை சூர்யாவுக்கு வழங்கப்பட்டது. அதை சூர்யா ரகுமானிடம் காட்ட, ரகுமான் பார்த்து சிரி சிரி என சிரித்துக் கொண்டே இருந்தார். அதேபோல் மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் மனைவி பிரியங்கா சங்கர் தனது பேரன் நட்சத்திரனுடன் மேடை ஏறி இரண்டு விருதுகளையும் வாங்கினார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் தொடங்கி இணையவாசிகள் பலரும் கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள்.


Click it and Unblock the Notifications











