கொரோனா காலத்தில் சம்பளத்தை குறைப்பாருன்னு பார்த்தால்.. இப்படி இஷ்டத்துக்கு ஏத்திட்டாரே சாய் பல்லவி!
சென்னை: தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்து கலக்கி வருகிறார் நடிகை சாய் பல்லவி.
சமீபத்தில் திருச்சியில் மருத்துவ படிப்பு தொடர்பான தேர்வெழுத கலந்துக் கொண்ட சாய் பல்லவியை பார்த்து பலரும் ஆச்சர்யப்பட்டு செல்ஃபிக்களை எடுத்துக் கொண்டு வைரலாக்கினர்.
சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா என்று பார்த்தால், கிடு கிடுவென தனது சம்பளத்தை இஷ்டத்துக்கு உயர்த்தி உள்ளாராம் சாய் பல்லவி.

பிரேமம் தந்த மலர்
தமிழ்நாட்டு பெண்ணான சாய் பல்லவி, பிரபுதேவாவின் நடன நிகழ்ச்சிகளில் எல்லாம் கலந்து கொண்டு ஒரு டான்ஸர் ஆக வலம் வர துடித்து இருந்த வேளையில், இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் மலையாள படமான பிரேமம் படத்தில், சூப்பரான மலர் டீச்சர் கதாபாத்திரத்தை கொடுத்து, சாய் பல்லவியை முன்னணி நடிகையாக மாற்றி விட்டார்.

மூன்று மொழிகளில்
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் என மூன்று மொழிகளிலும் பல முன்னணி நடிகர்களுடன் சிறப்பான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து அசத்தி வருகிறார் நடிகை சாய் பல்லவி. பிரேமம் படத்தைத் தொடர்ந்து துல்கர் சல்மான் உடன் கலி, தமிழில் நடிகர் சூர்யாவுடன் என்.ஜி.கே., மற்றும் தனுஷ் உடன் மாரி 2 மற்றும் ஏ.எல். விஜய் இயக்கத்தில் தியா உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

ரவுடி பேபி
நடிகர் தனுஷும் நம்ம ரவுடி பேபி சாய் பல்லவியும் மாரி 2 படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் செம்ம ஆட்டம் போட்ட ரவுடி பேபி பாடல் 954 மில்லியன் வியூஸ்களை கடந்து இமாலய சாதனை பெற்றுள்ளது. சீக்கிரமே 1000 மில்லியன் வியூஸ் கடந்து விடும் என்பது தெரிகிறது. சாய் பல்லவியின் நடனத் திறமைக்கு முழு தீணியை பிரபுதேவா போட்டிருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

டாக்டராக்கும்
நடிகை சாய் பல்லவி ஒரு எம்.பி.பி.எஸ் பட்டதாரி என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் திருச்சி கல்லூரியில் Foreign Medical Graduate Examination (FMGE) எனும் தேர்வை எழுத வந்து ரசிகர்கள் மத்தியில் சிக்கிக் கொண்டு அவர்களுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டு வைரலானார். அந்த தேர்வை முடித்து விட்டு அப்படியே வெளிநாட்டில் மருத்துவம் பார்க்க சென்று விடுவார் என்று நினைத்தால், மீண்டும் சினிமாவில் பிசியாகி விட்டார்.

2 கோடி கொடுங்க
கொரோனா பரவல் காரணமாக நடிகர்கள் மற்றும் சினிமா கலைஞர்களின் சம்பளங்களை பாதியாக குறைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன. விஜய் ஆண்டனி, ஹரிஷ் கல்யாண் உள்ளிட்ட பல ஹீரோக்கள் தாமாகவே முன் வந்து சம்பளத்தை குறைத்துக் கொண்டனர். இந்நிலையில், தனது அடுத்த படத்துக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கேட்டுள்ளார் சாய் பல்லவி என்ற தகவல் வெளியாகி உள்ளது.

எந்த படத்துக்கு
நடிகர் நானியின் 25வது படமான V ஒடிடி தளமான அமேசான் பிரைமில் வெளியாகி வெளியன வேகத்திலே படு தோல்வியையும் சந்தித்தது. அடுத்ததாக இயக்குநர் ராகுல் சங்க்ரித்யன் இயக்கத்தில் நானி நடிக்க உள்ள புதிய படத்திற்கு சாய் பல்லவியை நாயகியாக ஒப்பந்தம் செய்துள்ளனர். அந்த படத்தில் நடிக்கத் தான் இத்தனை கோடி கேட்கிறாராம். ஆனால், படக்குழு சில பல லட்சங்களை குறைத்துக் கொள்ளுங்கள் என்ற கோரிக்கையை வைத்து வருவதாகவும் தகவல்.
Recommended Video

கைவசம்
நடிகை சாய் பல்லவின் தெலுங்கில் தற்போது விராட பருவம் மற்றும் லவ் ஸ்டோரி என இரு படங்களில் நடித்து வருகிறார். நாக சைதன்யா உடன் அவர் நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் இந்த ஆண்டு டிசம்பரில் வெளியாகும் என தெரிகிறது. விராட பருவம் திரைப்படத்தில் நக்சலைட் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











