Maha Shivratri 2025: மகா சிவராத்திரி.. விழுந்து கும்பிட்ட சாய் பல்லவி.. சிவனடியாராகவே மாறீட்டாங்கப்பா!
சென்னை: இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி நேற்று அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இதற்காக இந்தியா முழுவதும் உள்ள சிவன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்பட்டது. அதேபோல், வெளிநாடுகளில் உள்ள சிவன் கோவில்களிலும் பக்தர்கள் ஒன்று கூடி வழிபாடு செய்தார்கள். இப்படியான நிலையில் நடிகை சாய் பல்லவி சிவன் கோவிலில் தரிசனம் செய்துள்ளார்.
நடிகை சாய் பல்லவி தமிழ் சினிமாவில் மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த தென்னிந்திய சினிமாவிலும் மிகவும் முக்கியமான நடிகையாக வலம் வருகிறார். பிரேமம் படத்தின் மூலம் தனக்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் புகழ் கிடைத்தாலும், தனது அசாத்திய நடிப்பினால் தொடர்ந்து தான் நடிக்கும் படங்களில் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறார். கமர்ஷியல் ஃபிலிமோ இல்லை ஆர்ட் ஃபிலிமோ என எது இருந்தாலும், அதில் தனக்கு நடிக்க ஸ்கோப் இருக்கா இல்லையா என யோசித்து முடிவு செய்யக்கூடிய நடிகை.

சிறப்பான கதைகளை பொறுப்பாக தேர்ந்தெடுத்து அதில் அட்டகாசமான நடிப்பினை வெளிப்படுத்துவதால், சாய் பல்லவி தற்போது பாலிவுட்டிலும் ஒரு படத்தில் கமிட் ஆகி நடித்து வருகிறார். அடிப்படையில் மருத்துவரான சாய் பல்லவி, நடிப்பில் எந்த அளவிற்கு கவனமாக உள்ளாரோ அதே அளவிற்கு பொறுப்பான பிரபலமாகவும் நடந்து கொள்கிறார். நீட் தேர்வுக்கு எதிரான தனது நிலைப்பாட்டை ரொம்பவும் உறுதியாக வைத்தார்.

சாய் பல்லவி: இவரது நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப் படமாக மாறியது. இவரது நடிப்பு குறித்து பலரும் பாராட்டினார்கள். மேலும் இந்தப் படத்தில் நடித்ததற்காக சாய் பல்லவிக்கு கட்டாயம் தேசிய விருது கிடைக்கும் என கூறப்படுகிறது. படம் முழுவதும் கலக்கிய சாய் பல்லவி, படத்தின் கடைசி 10 நிமிடத்தை தனது அசாத்திய நடிப்பால் தூக்கி நிறுத்தி இருப்பார்.
சிவராத்திரி: தற்போதும் பல படங்களில் கமிட் ஆகி நடித்து வருகிறார். இந்நிலையில் நேற்று அதாவது பிப்ரவரி 26ஆம் தேதி மகா சிவராத்திரி என்பதால், சிவன் கோவிலுக்குச் சென்று வழிபாடு செய்துள்ளார். சிவன் சிலைக்கு முன்னால் நின்று பயபக்தியுடன் அவர் சிவனை விழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

அனிருத்: சாய் பல்லவி சிவனை விழுந்து கும்பிட்டு வழிபட்டதைப் பார்த்த ரசிகர்கள், சாய் பல்லவி கிட்டத்தட்ட சிவனடியாராகவே மாறீட்டாரு போலயே என கமெண்ட் அடித்து வருகிறார்கள். மகா சிவராத்திரியை முன்னிட்டு திருவண்ணாமலை கோவிலில் அனிருத் பக்தர்கள் வெள்ளத்தில் நீண்ட நேரம் வரிசையில் நின்று சிவனை வழிபட்டார். இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோக்களும் இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.



Click it and Unblock the Notifications











