கவர்ச்சியும் லிப் டூ லிப் முத்தமும் எனக்கு அலர்ஜி - சாய் பல்லவி

By R VINOTH

சென்னை: தான் நடிக்கும் படத்தில் கதா பாத்திரங்களில் வெரைட்டி, சவாலான கேரக்டர்கள் என அனைத்திலும் வித்தியாசம் காட்டும் சாய் பல்லவி, கவர்ச்சி என்ற சொல்லைக் கேட்டாலே காத தூரம் ஓட்டமெடுக்கிறார். அதே போல் முத்தம் தருவது போல் காட்சிகள் இருந்தாலும் அதில் ரொம்பவே கஞ்சத்தனம் காட்டுகிறார். முத்தக்காட்சி இருக்கிறது என்பதற்காக டியர் காம்ரேட் படத்தையே வேண்டாம் என்று ஒதுக்கினாராம் சாய் பல்லவி.

விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடிப்பில் சமீபத்தில் தெலுங்கு மற்றும் தமிழ் மொழியில் வெளிவந்து வெற்றி நடை போடும் படம் டியர் காம்ரேட் படத்தில் நடிக்க சாய் பல்லவியைத்தான் கேட்டார்களாம்.

படத்தின் கதையை கேட்ட அவர், லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிப்பதற்கும், ஓவர் கிளாமர் காட்டி நடிப்பதற்கும் தனக்கு துளி கூட இஷ்டம் இல்லை, அதனால் நீங்கள் வேறு ஹீரோயினை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டாராம்.

ரசிகர்களின் மலர்

ரசிகர்களின் மலர்

2005ஆம் ஆண்டு வெளிவந்த தாம் தூம் படத்தில் சிறிய கேரக்டரில் நடித்திருந்தாலும், 2015ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளிவந்த பிரேமம் படத்தில் மலர் கேரக்டரில் நடித்ததால் ஒரே படத்தின் மூலம் அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார் சாய் பல்லவி. இந்தப் படத்தின் மூலம் தமிழ் திரைப்பட ரசிசர்களின் நெஞ்சத்திலும் நீக்கமற நிறைந்துவிட்டார்.

தவம் கிடந்த இயக்குநர்கள்

தவம் கிடந்த இயக்குநர்கள்

பிரேமம் படம் வெற்றிபெற்றதை அடுத்து மலையாளம், தமிழ், தெலுங்கு என தென்னிந்திய திரையுலகில் சாய் பல்லவிக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. சம்பளம் பற்றி பிரச்சனை இல்லை. நீங்கள் நடித்தால் மட்டும் போதும் என்று தயாரிப்பாளர்கள் வீட்டு வாசலில் தவம் கிடந்தனர்.

ஆனாலும், இவர் தாய் மொழியான தமிழ்படத்தில் நடிப்பதை தவிர்த்து வந்தார் என்றே சொல்லலாம்.

வெற்றி பெறாத நாயகி

வெற்றி பெறாத நாயகி

அதே நேரத்தில் தெலுங்கு படத்தில் நடிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கத் தொடங்கினார். தமிழ் படங்களில் நடிப்பதை தவிர்ப்பதற்கு இவர் சொன்ன காரணம், தமிழில் சரியான கதையம்சம் கொண்ட படங்கள் இன்னும் அமையவில்லை என்பது தான். மிக நீண்ட நாட்களக்கு பின்பு அவர் எதிர்பார்த்த மாதிரியான கதையம்சம் கொண்ட படமான தியா (கரு) படத்தின் கதை பிடித்திருந்ததால் அந்தப் படத்தில் நடித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு அந்தப் படம் வெற்றி பெறவில்லை.

ரவுடி பேபி நாயகி

ரவுடி பேபி நாயகி

பின்பு தனுஷ் தயாரிப்பில் மாரி 2 படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தார். அந்தப் படத்தில் இவர் போட்ட ரவுடி பேபி குத்தாட்ட பாடல், யூடியூபில் இது வரையிலும் 58 கோடி பேர்களால் பார்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அடுத்ததாக சாய் பல்லவி சூர்யாவுடன் இணைந்து என்.ஜி.கே படத்தில் நெகடிவ் கேரக்டரில் நடித்திருந்தார். இருந்தாலும் அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை.

முத்தம் வேண்டாம்

முத்தம் வேண்டாம்

தான் நடிக்கும் படத்தில் கதா பாத்திரங்களில் வெரைட்டி, சவாலான கேரக்டர்கள் என அனைத்திலும் வித்தியாசம் காட்டும் சாய் பல்லவி, கவர்ச்சி என்ற சொல்லைக் கேட்டாலே காத தூரம் ஓட்டமெடுக்கிறார். அதே போல் முத்தம் தருவது போல் காட்சிகள் இருந்தாலும் அதில் ரொம்பவே கஞ்சத்தனம் காட்டுகிறார் (இதனால் தானோ என்னவே தமிழில் இவருக்கு சான்ஸ் ரொம்ப கம்மியோ). அதிலும் லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்கவேண்டும் என்றால் அந்தப் படமே வேண்டாம் என்று நடையை கட்டுகிறார்.

விஜய் தேவாரகொண்டா

விஜய் தேவாரகொண்டா

இந்த நிலையில், சமீபத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா மந்தான நடிப்பில், தமிழ் தெலுங்கு என இரண்டு மொழியிலும் வெளிவந்து வெற்றி நடை போடும் டியர் காம்ரேட் படத்தில் நடிக்க சாய் பல்லவியைத் தான் முதலில் அனுகினார் அந்தப் படத்தின் இயக்குநர். முதலில் ஒன் லைன் கதையை கேட்டு பிடித்திருந்த நிலையில், பின்பு படத்தின் முழு காட்சிகளைப் பற்றி கேட்டிருக்கிறார் சாய் பல்லவி. அப்போது படத்தில் இடம் பெறும் முக்கிய திருப்புமுனைக் காட்சிகள், முத்தக் காட்சிகள், குறிப்பாக லிப் டு லிப் முத்தக் காட்சியைப் பற்றி சொன்னவுடன் சற்று ஜெர்க் ஆனார்.

கீத கோவிந்தம் நாயகி

கீத கோவிந்தம் நாயகி

லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிப்பதற்கும், ஓவர் கிளாமர் காட்டி நடிப்பதற்கும் தனக்கு துளி கூட இஷ்டம் இல்லை, அதனால் நீங்கள் வேறு ஹீரோயினை தேர்வு செய்து கொள்ளுங்கள் என்று சொல்லி அனுப்பிவிட்டார். அதற்கு பிறகே, இன்றைய இளைஞர்களின் தூக்கத்தை கெடுத்துக் கொண்டிருக்கும் ரஷ்மிக மந்தனா என்ற அழகுப் புயலை கேட்டதற்கு தயங்காமல் உடனே ஒப்புக்கொண்டார். குறிப்பாக லிப் டு லிப் முத்தக் காட்சியில் நடிக்கவும் ஒப்புக்கொண்டார். ரஷ்மிகா மந்தனாவும், விஜய் தேவரகொண்டாவும் ஏற்கனவே கீதா கோவிந்தம் என்ற படத்தில் ஜோடி போட்டு நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X