கொடுமை.. சூர்ப்பனகை மாதிரி இருக்காரு.. ராமாயணம் ஸ்டில்ஸ் லீக்.. சாய் பல்லவியை கலாய்க்கும் ஃபேன்ஸ்!

மும்பை: நடிகர் பிரபாஸ், கிருத்தி சனோன் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் கடந்த ஆண்டு ராமாயணத்தை மையப்படுத்தி உருவான ஆதிபுருஷ் திரைப்படம் பயங்கரமாக ட்ரோல் செய்யப்பட்டது. மோசமான இராமாயணத்தை இளம் தலைமுறையினருக்கு கடத்த பிரபாஸ் பார்த்துள்ள என கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

அதன் காரணமாகவே தற்போது அனிமல் படத்தில் படு ஆபாசமாக நடித்த ரன்பீர் கபூரை வைத்து ராமாயணம் படத்தை இயக்குனர் நித்திஷ் திவாரி உருவாக்கி வருகிறார். பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படத்தின் மேக்கிங் காட்சிகள் தற்போது கசிந்து தீயாக பரவி வருகிறது.

Sai Pallavi criticized heavily for her Ramayana look after making stills leaked

இந்த படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக சீதாதேவி கதாபாத்திரத்தில் நடிகை சாய் பல்லவி நடித்து வருகிறார். அவரது லுக்கை பார்த்த ரசிகர்கள் இவரைப் பார்த்தால் சீதாம்மா போல இல்லை என்றும் சூர்ப்பனகை போல உள்ளார் என்றும் கலாய்த்து வருகின்றனர்.

ராமாயணம்: சம்பூர்வ ராமாயணம் முதல் ஆதிபுருஷ் வரை ராமாயண கதையை மையப்படுத்தி இந்தியாவில் பல படங்கள் இதுவரை உருவாகியுள்ளன. அந்தக்காலம் முதல் இந்த காலம் வரை எந்த காலமானாலும் ராமாயணம் மற்றும் மகாபாரதம் போன்ற இந்தியாவின் இதிகாசங்கள் எப்போதுமே மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்து கொண்டுதான் இருக்கும். திரைப்படங்களைத் தாண்டி ராமாயணம் மற்றும் மகாபாரதத்தை பல சின்னத்திரை தொடர்களும் சிறப்பான முறையில் எடுத்துக்காட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளன. ஆனாலும், அதைத் தொடர்ந்து பல இயக்குநர்கள் படமாக எடுத்துக் கொண்டே வருகின்றனர்.

Sai Pallavi criticized heavily for her Ramayana look after making stills leaked

பாலிவுட்டில் சாய் பல்லவி: தென்னிந்திய நடிகைகள் தொடர்ந்து பாலிவுட்டில் அறிமுகமாகி வருகின்றனர். ராஷ்மிகா மந்தனா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், பூஜா ஹெக்டே வரிசையில் தற்போது நடிகை சாய் பல்லவி பாலிவுட்டில் பிரம்மாண்ட படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளம் படங்களில் நடித்து வந்த சாய் பல்லவி அடுத்ததாக ரன்பீர் கபூருக்கு ஜோடியாக இந்தியில் அறிமுகமாக உள்ளார். முதல் படத்திலேயே சீதையாக நடிக்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.

லீக்கான புகைப்படங்கள்: ரன்பீர் கபூர் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ராமாயணம் படப்பிடிப்பில் இருந்து சில பிரத்யேக புகைப்படங்கள் இணையத்தில் கசிந்துள்ளன. தற்போது#SaiPallavi என்கிற ஹாஷ்டேக்கில் அந்த போட்டோக்கள் டிரெண்டாகி வருகின்றன.

Sai Pallavi criticized heavily for her Ramayana look after making stills leaked

சூர்ப்பனகை மாதிரி: சாய் பல்லவி சீதையாக நடித்து வருவதைப் பார்த்த அவரது ரசிகர்கள் பாலிவுட்டில் சிறப்பான அறிமுகத்தை கொடுக்க காத்திருக்கிறார் என கொண்டாடி வருகின்றனர். அதே நேரத்தில் சாய் பல்லவியின் பாலிவுட் என்ட்ரியை எதிர்க்கும் ஹேட்டர்கள் இவரைப் பார்த்தால் சீதை போல தெரியவில்லை என்றும் சூர்ப்பனகை மாதிரி தெரிகிறது என கலாய்த்து வருகின்றனர்.

ரன்பீர் கபூர் லுக் எப்படி?: அனிமல் படத்தில் சைக்கோ தனமான நடிப்பை வெளிப்படுத்தி ஆடையே இல்லாமல் படுக்கையறை காட்சிகளில் எல்லாம் நடித்த ரன்பீர் கபூர் தற்போது ராமராக மாறியுள்ளார். அவரது லுக்கை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் பிரபாஸின் ஆதிபுருஷ் ராமர் லுக்கிற்கு இது பெட்டர் என பதிவிட்டு வருகின்றனர். ஆனால், ராமருக்கு உண்டான ராஜ கலையே ரன்பீருக்கு இல்லை என நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். இந்த படத்தில் விஜய்சேதுபதி, யஷ் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளதாக கூறுகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X