Just In
- 1 hr ago
திருமணம் செய்வதாக ஏமாற்றி பாலியல் வன்கொடுமை.. ஒளிப்பதிவாளர் மீது பிரபல நடிகை மீண்டும் புகார்!
- 1 hr ago
பல பெண்களுடன் தொடர்பு.. தன்னால் கர்ப்பமான பிரபல தொகுப்பாளினி.. கருவை கலைத்து கழட்டிவிட்ட ஹேமந்த்!
- 2 hrs ago
'இது ஞாபகமிருக்கா கேர்ள்ஸ்?' வேகமாக பரவும் முன்னாள் ஹீரோயின்களின் த்ரோபேக் போட்டோஸ்!
- 2 hrs ago
ராஜமவுலியின் 'ஆர்ஆர்ஆர்' ரிலீஸ் தேதி.. அறிவித்துவிட்டு அவசரமாக டெலிட் செய்த பிரபல நடிகை!
Don't Miss!
- News
ஓஹோ.. தனி சின்னத்தில் போட்டியிட தயங்க இதுதான் காரணமா.. அப்ப "உதயசூரியன்?".. விறுவிறு விசிக..!
- Education
ரூ.1.20 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பிக்கலாம் வாங்க!
- Finance
பழைய சீரியஸ் 100, 10, 5 ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் இருந்து நீக்க முடிவு: ரிசர்வ் வங்கி
- Sports
அதெல்லாம் பண்ண முடியாது.. எதிரியாக இருந்தாலும் மரியாதை முக்கியம்.. கண்ணியம் காத்த ரஹானே!
- Automobiles
இந்த குடியரசு தினத்தில் புதிய ஸ்கூட்டர் வாங்கும் பிளான் இருக்கா? இதோ உங்களுக்கான டாப் 5 பட்ஜெட் ஸ்கூட்டர்கள்!!
- Lifestyle
இந்த பிரச்சினை உள்ளவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வது அவர்களுக்கு ஆபத்தை அதிகரிக்குமாம்...!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்.. சம்பளமாக ரூ.2 கோடி கேட்கிறாராமே சாய் பல்லவி.. தயாரிப்பு ஷாக்!
சென்னை: அந்த சூப்பர் ஹிட் படத்தின் ரீமேக்கில் நடிக்க, நடிகை சாய் பல்லவி ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
மலையாளத்தில் சூப்பர் ஹிட்டான படம், 'அய்யப்பனும் கோஷியும்'. பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்தனர்.
பிருத்விராஜ், முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன், சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.
ஷூட்டிங் சென்றபோது பரிதாபம்.. அணையில் மூழ்கி பிரபல நடிகர் பலியானது எப்படி? திரையுலகம் அதிர்ச்சி!

சிம்பிளான கதை
இதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட படம் இது. இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது. இதன் தமிழ் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகிர்தண்டா படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார்.

தெலுங்கு ரீமேக்
இந்தியில், இதன் ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் வாங்கி இருக்கிறார். அதில் அவர் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இதன் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணும், ராணாவும் நடிக்கின்றனர். பவன், இன்ஸ்பெக்டர் கேரக்டரிலும் ராணா, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேரக்டரிலும் நடிக்க இருக்கின்றனர்.

ஐஸ்வர்யா ராஜேஷ்
படத்தை சாகர் கே சந்திரா இயக்குகிறார். இதில் ராணா மனைவியாக, ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கிறார். ராணாவின் அதிகாரம் கொண்ட தந்தையாக நடிகர் சமுத்திரக்கனி நடிக்கிறார். இதில் பவன் கல்யாண் மனைவியாக நடிக்க, பிரபல நடிகை சாய் பல்லவியிடம் தயாரிப்பு தரப்பில் பேசியுள்ளனர்.

2 கோடி சம்பளம்
இதில் நடிக்க அவர் ரூ.2 கோடி சம்பளம் கேட்டதாகக் கூறப்படுகிறது. இதனால் தயாரிப்பாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கேட்ட சம்பளம் கொடுத்து அவரை ஒப்பந்தம் செய்வதா? அல்லது வேறு நாயகியை தேர்வு செய்வதா? என்று படக்குழுவினர் ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.

முன்னணி ஹீரோயின்
நடிகை சாய் பல்லவி, மலையாளத்தில் பிரேமம் படம் மூலம் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றதால் மற்ற மொழி படங்களில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. தமிழில் தியா, மாரி-2, என்.ஜி.கே படங்களில் வந்தார். தெலுங்கிலும் முன்னணி ஹீரோயினாக நடித்து வருகிறார்.