அந்த ஹீரோவோட மட்டும் நடிக்கவே மாட்டேன்.. ஏன் இப்படி சொல்லியிருக்காங்க சாய் பல்லவி?

ஐதராபாத் : நடிகை சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாளம் என ரவுண்ட் கட்டி நடித்து வருகிறார்.

Recommended Video

Kaali Venkat | சாய் பல்லவி தான் படத்தோட வெற்றி| *Interview

குறிப்பாக தெலுங்குப் படங்களில் அதிகமாக நடித்து வருகிறார். ஏறக்குறைய அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார்.

சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான கார்கி படம் இவருக்கு சிறப்பான விமர்சனங்களை பெற்றுத் தந்துள்ளது.

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவியை அறிமுகப்படுத்திய பெருமையை மலையாளத்தின் பிரேமம் படம் எடுத்துக் கொண்டாலும் திரையில் அவருக்கு முதல்முதலில் அறிமுகத்தை கொடுத்தது நமது விஜய் டிவிதான். விஜய் டிவியின் உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில்தான் சாய் பல்லவி முதலில் பங்கேற்றார். இந்த நிகழ்ச்சி கடந்த 2008ல் ஒளிபரப்பானது.

விஜய் டிவியில் அறிமுகம்

விஜய் டிவியில் அறிமுகம்

தொடர்ந்து அடுத்த ஆண்டிலேயே இடிவியின் தெலுங்கு நிகழ்ச்சியான தி அல்டிமேட்டு டான்சு என்ற நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். இயல்பாகவே நடனத்தில் அதிக ஈடுபாடு கொண்ட சாய் பல்லவிக்கு அடுத்தடுத்த இந்த டான்ஸ் நிகழ்ச்சிகள் நல்ல டான்சர் என்ற பெயரையும் ஏராளமான ரசிகர்களையும் பெற்றுத் தந்தன.

பிரேமம் படத்தில் என்ட்ரி

பிரேமம் படத்தில் என்ட்ரி

இதையடுத்து படிப்பில் கவனம் செலுத்திய சாய் பல்லவி ஒரு டாக்டர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். தொடர்ந்து 6 ஆண்டுகள் கழித்து மலையாளத்தில் பிரேமம் படத்தில் இவர் ஏற்று நடித்த மலர் டீச்சர் கதாபாத்திரம் இவருக்கு நல்ல அறிமுகத்தை கொடுத்த நிலையில், நிற்கக்கூட நேரமில்லாமல் பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார் சாய் பல்லவி.

தெலுங்கில் பிசி

தெலுங்கில் பிசி

தெலுங்கில் இவர் நடிப்பில் வெளியான படங்கள் இவருக்கு சிறப்பாக கைகொடுத்த நிலையில், அதிகமான தெலுங்குப் படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறியுள்ளார். குறுகிய காலத்திலேயே இந்த உயரத்தை இவர் எட்டியுள்ளார். தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துவரும் சாய் பல்லவி ஒரு நடிகரோடு மட்டும் நடிக்கவே மாட்டேன் என்று கூறியுள்ளார்.

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மாட்டேன்

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மாட்டேன்

அவரது சமீபத்திய பேட்டியொன்றில் தான் விஜய் தேவரகொண்டாவுடன் மட்டும் எப்போதும் ஜோடியாக இணைய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார். அந்தப் பேட்டியில் தான் பல படங்களில் குடும்பப் பாங்கான கேரக்டர்களில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொண்ட கேரக்டர்களில் நடித்துள்ளதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.

முன்னணி நடிகருடன் நடிக்க மறுப்பு

முன்னணி நடிகருடன் நடிக்க மறுப்பு

தெலுங்கில் அதிகமான படங்களில் நடித்துவரும் விஜய் தேவரகொண்டா நடிப்பில் அதிகமான படங்கள் வெளியாகிவருகின்றன. இவரது நடிப்பில் வெளியான அர்ஜுன், ரெட்டி உள்ளிட்ட படங்கள் இவருக்கு ஏற்றத்தையும் ஏராளமான ரசிகர்களையும் கொடுத்துள்ளன. இந்நிலையில் முன்னணி நடிகரான இவருடன் நடிக்க மாட்டேன் என்று சாய் பல்லவி கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிகமான முத்த காட்சிகள்

அதிகமான முத்த காட்சிகள்

முன்னதாக விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தில் நடிக்க முதலில் சாய் பல்லவிக்குத்தான் வாய்ப்பு கிடைத்ததாம். இதில் அதிகமான முத்தக்காட்சிகளில் நடிக்க வேண்டியிருந்ததால் அவர் அந்த வாய்ப்பை ரிஜெக்ட் செய்துள்ளார். இதையடுத்தே அந்தப் படத்தில் ராஷ்மிகா இணைந்திருந்தார்.

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

ரசிகர்கள் எதிர்பார்ப்பு

இதையடுத்தே சாய் பல்லவி, விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்க மாட்டேன் என்ற முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. எது எப்படியோ தெலுங்குப் படவுலகின் முன்னணி நடிகர் மற்றும் நடிகையாக உள்ள விஜய் தேவரகொண்டா மற்றும் சாய் பல்லவி காம்பினேஷன் கண்டிப்பாக சிறப்பாகத்தான் அமையும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X