அது மட்டுமில்லை இதுவும் ME TOO-வில் தான் வரும்... சாய் பல்லவி சொல்ல வருவது என்ன..?
சென்னை: தமிழ், தெலுங்கு, மலையாளம் மொழிகளில் பிஸியாக நடித்து வரும் சாய் பல்லவி மீ டூ குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.
திரையுலகில் நடிகைகளுக்கு நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் பாலியல் தொல்லை கொடுப்பதாக அடிக்கடி செய்திகள் வெளியாகி வருகின்றன.
இந்நிலையில், மீ டூ பற்றிய சாய் பல்லவியின் கருத்து திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் டிவியின் உங்களில் யார் பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி.
தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே 24 படத்தில் கமிட் ஆகியுள்ள சாய் பல்லவி, தெலுங்கிலும் நடித்து வருகிறார்.

மீ டூ இயக்கம்
ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வெயின்ஸ் டீன் பாலியல் ரீதியாக துன்புறுத்தல் செய்ததாக நடிகைகள் பலர் புகாரளித்து இருந்தனர். அதன் தொடர்ச்சியாக உலகம் முழுவதும் Me Too என்ற இயக்கம் பிரபலமானது. இதனைத் தொடர்ந்து இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள், நடிகர்களால் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளான நடிகைகள் Me Too என்ற ஹேஷ் டேக்கை பயன்படுத்தி பல உண்மைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்தனர். இதனால், நடிகைகளுக்கு நடந்த பல பாலியல் தொல்லைகள் வெளியே வந்தன.

சாய் பல்லவி விளக்கம்
இந்நிலையில், Me Too குறித்து நடிகை சாய் பல்லவி பரபரப்பான விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான உங்களில் யார் அடுத்த பிரபுதேவா, ஜோடி நம்பர் 1 போன்ற ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பலரது கவனத்தையும் ஈர்த்தவர் சாய் பல்லவி. சிறந்த டான்ஸரான சாய் பல்லவி, மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்து புகழ் பெற்றார். தற்போது தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் டாப் ஹீரோயினாக அசத்தி வருகிறார்.

அதுவும் மீ டூ தான்
இதனிடையே ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சாய் பல்லவியிடம் Me Too குறித்து கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், "உடல் ரீதியிலான துன்புறுத்தல்கள் மட்டும் இல்லாமல் பெண்களுக்கு எதிரான வார்த்தைகள், செய்கைகள் மூலம் தொந்தரவு கொடுப்பதையும் சாதாரணமாக கடந்து செல்ல முடியாது. பெண்களை அசிங்கமாக பேசுவதும் திட்டுவதும் அவர்களுக்கு மனரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் துஷ்பிரயோகம் ஆகும். அதனால் இதுமாதிரியான செயல்களும் Me Too-வில் தான் வரும்" என தெரிவித்துள்ளார்.

விஜய், அஜித்துடன் நடிக்க மறுப்பு
தனுஷுடன் மாரி 2, சூர்யாவுடன் NGK, கார்கி படங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, தற்போது சிவகார்த்திகேயனின் எஸ்கே 24-வில் கமிட் ஆகியுள்ளார். இந்தப் படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பது குறிப்பிடத்தக்கது. இன்னொரு பக்கம் தெலுங்கிலும் முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். ஆனாலும், விஜய், அஜித்துடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தும் அதனை மறுத்துவிட்டதாக சில தினங்களுக்கு முன்னர் செய்திகள் வெளியாகியிருந்தன.

நடிகைகளுக்கு முக்கியத்துவம்
விஜய்யின் வாரிசு படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு தான் கிடைத்ததாம். அதேபோல், அஜித்தின் வலிமை படத்திற்கும் முதலில் சாய் பல்லவியிடம் தான் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாம். ஆனால், வாரிசு, வலிமை படங்களில் அவரது கேரக்டருக்கு முக்கியத்துவம் இல்லாததால் தான் சாய் பல்லவி நடிக்க மறுத்துவிட்டதாக சொல்லப்பட்டது. சாய் பல்லவியின் இந்த துணிச்சலான முடிவு ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











