சூர்யாதான் எல்லாத்துக்கும் காரணம்.. கார்கி சக்சஸ் மீட்ல சாய் பல்லவி பகிர்ந்த தகவல்!

சென்னை : நடிகை சாய் பல்லவியின் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி சிறப்பான வரவேற்பை பெற்றுள்ளது கார்கி படம்.

Recommended Video

Sai Pallavi | சூர்யா தான் காரணம் | Gargi Press Meet| *Kollywood

இக்கட்டில் சிக்கும் தன்னுடைய தந்தையை அதிலிருந்து காக்க போராடும் இளம்பெண்ணின் கதாபாத்திரத்தில் சாய் பல்லவி மிரட்டியிருந்தார்.

சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிட்ட நிலையில், படத்திற்கு சிறப்பான வரவேற்பு காணப்படுகிறது.

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி

நடிகை சாய் பல்லவி, தன்னுடைய கவர்ச்சியை மட்டுமே நம்பாமல், நடிப்பையும் நம்பியே திரைத்துறையில் தன்னுடைய கேரியரை தொடர்ந்து வருகிறார். இவரது பல படங்கள் இவரது சிறப்பான நடிப்பில் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இதற்கு சமீபத்திய உதாரணம் கார்கி.

கார்கி படம்

கார்கி படம்

தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் வெளியான இந்தப் படத்திற்கு ரசிகர்களிடையே சிறப்பான வரவேற்பு காணப்பட்டது. படத்திற்கு அதிகமான பிரமோஷன்கள் எதுவும் செய்யப்படாத நிலையில் தமிழகத்தில் இந்தப் படத்தை சூர்யாவின் 2டி என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் வெளியிட்டது.

சிறப்பான பிரமோஷன்

சிறப்பான பிரமோஷன்

இதுவே படத்திற்கான சிறப்பான பிரமோஷனாக அமைந்தது. மேலும் திரையரங்குகளில் படத்தை பார்த்த ரசிகர்கள் மீண்டும் மீண்டும் படத்தை பார்க்க படையெடுத்ததும் சிறப்பாக அமைந்தது. அவர்களின் வார்த்தைகளும் விமர்சனங்களும் படத்திற்கான வரவேற்பை அதிகரித்தன. தொடர்ந்து படம் சிறப்பான அரங்கு கொள்ளாத காட்சிகளாக திரையரங்குகளில் ஓடி வருகின்றன.

கார்கி படத்தின் பலம்

கார்கி படத்தின் பலம்

இந்தப் படத்தில் லீட் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சாய் பல்லவி படத்திற்கு மிகச்சிறந்த பலம். இவர் இந்தப் படத்தை தாங்கிப் பிடிக்க மற்ற கேரக்டர்களும் அவருக்கு தோள் கொடுத்துள்ளன. படத்தின் இயக்குநர் கௌதம் ராமசந்திரன், ஒவ்வொரு கேரக்டருக்கும் முக்கியத்துவம் தந்து திரைக்கதையை அமைத்துள்ளார்.

சூர்யா நன்றி

சூர்யா நன்றி

முன்னதாக படத்திற்கு ரசிகர்கள் கொடுத்த ஆதரவிற்கு சூர்யா நன்றி தொவித்திருந்தார். சாய் பல்லவி, காளி வெங்கட் மற்றும் இயக்குநர் கௌதம் ராமசந்திரனுக்கும் அவர் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து இந்தப் பதிவிற்கு நன்றி தெரிவித்த சாய் பல்லவி, ஜோதிகாவிற்கு தன்னுடைய நன்றியை தெரிவிக்கவும் கேட்டுக் கொண்டிருந்தார்.

சூர்யாவிற்கு நன்றி

இதனிடையே தற்போது படத்தின் சக்சஸ் மீட் நடத்தப்பட்டுள்ளது. இதில் கலந்துக் கொண்ட சாய் பல்லவி மற்றும் குழுவினர், அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டனர். குறிப்பாக சூர்யாவிற்கு சாய் பல்லவி நன்றி தெரிவித்துள்ளார். அவர்மூலம்தான் படத்திற்கு பத்து மடங்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் கிடைத்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

படத்திற்கு வெளிச்சம்

படத்திற்கு வெளிச்சம்

சூர்யா இந்தப் படத்தை வெளியிட்டவுடன்தான் படத்திற்கான வெளிச்சம் கிடைத்ததாகவும் அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். தொடர்ந்து படக்குழுவினருக்கும் இயக்குநருக்கும் இந்த வாய்ப்பை கொடுத்த தயாரிப்பாளர்களுக்கும் அவர் நன்றி தெரிவித்துக் கொண்டார். வழக்கம்போல இந்த நிகழ்ச்சிக்கும் அவர் புடவையில் வந்து அசத்தினார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X