சாய் பல்லவி ஒரு பொம்பள தல: ரோபோ ஷங்கர்- இது 'தல'க்கு தெரியுமா?
Recommended Video

சென்னை: மாரி 2 செய்தியாளர்கள் சந்திப்பின்போது சாய் பல்லவியை பொம்பள தல என்று அழைத்துள்ளார் ரோபோ ஷங்கர்.
பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடித்த மாரி 2 படம் வரும் 21ம் தேதி ரிலீஸாகிறது. இந்நிலையில் இன்று சென்னையில் மாரி 2 படக்குழு செய்தியாளர்களை சந்தித்து பேசியது.
அப்பொழுது ரோபோ ஷங்கர் பேசியதாவது,

தனுஷ்
மாரி 2 படப்பிடிப்பின்போது ஒவ்வொரு நாளும் அவ்வளவு ஸ்பேஸ் கொடுத்த தனுஷ் சாரை என் வாழ்நாளில் மறக்கவே மாட்டேன். சாய் பல்லவி பொம்பள தல. டைட்டில் கார்டிலேயே போடச் சொல்லியாச்சு. தமிழ் திரையுலக ஹீரோயின்களிலேயே பொம்பள தல சாய் பல்லவி தான்.

சாய் பல்லவி
சாய் பல்லவியை அழகாக குழந்தை மாதிரி பார்த்திருப்போம். ஆனால் இந்த படத்தில் கிழி, கிழி, கிழின்னு கிழிச்சிருக்கு. பாடல்கள், காட்சிகளில் கிழித்துள்ளார். மாரி 2 மூலம் சாய் பல்லவியின் வேறு ஒரு முகத்தை பார்க்கப் போகிறோம். யுவன் ஷங்கர் ராஜா இசையில் பாடல்கள் ஹிட்டாகியுள்ளன. ராஜா சார் பாடிய பாடல் தான் எனக்கு மிகவும் பிடிக்கும். தனுஷ் சாருக்கும் அது தான் பிடித்துள்ளது.

ஹேப்பி
எனக்கு மாரி செட்டுக்கு வருவது என்றால் தான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். ஏன் என்றால் மாரி கதாபாத்திரம் அப்படி. வேறு பட செட்டில் தனுஷ் அமைதியாக இருப்பார். ஆனால் மாரி செட்டில் மட்டும் என்ஜாய் பண்ணி நடித்தார். அவ்வளவு ஹேப்பியாக இருந்தார். செட்டில் தனுஷ் சார் இருந்தாலும் வினோத் இல்லை என்றால் நான் நடிக்க மாட்டேன் என்றேன்.

ஹிட்
எனக்கு எப்படி மாரி படம் பெயர் வாங்கிக் கொடுத்ததோ அதே போன்று மாரி 2 படம் மூலம் வினோத்துக்கு நல்ல பெயர் கிடைக்கும். மாரி 3 படத்தை துவங்கி அமெரிக்காவுக்கு போய் ஆட்டோ ஓட்டுறோம். சாருக்கு தங்கமான மனுசு அதனால் படம் ரிலீஸான ஒரு வாரத்தில் அனைவருக்கும் 5 பவுனில் தங்கம் அளிப்பார் என்றார் ரோபோ ஷங்கர்.


Click it and Unblock the Notifications











