»   »  என்னடா இது சாய் பல்லவிக்கு வந்த சோதனை... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

என்னடா இது சாய் பல்லவிக்கு வந்த சோதனை... அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
சாய் பல்லவிக்கு வந்த சோதனை...

சென்னை : 'பிரேமம்' படத்தின் மூலம் கொண்டாடப்பட்ட 'மலர் டீச்சர்' சாய் பல்லவி தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவியின் புது கெட்டப்பில் வெளியான சமீபத்திய புகைப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகியுள்ளனர்.

சாய் பல்லவியின் இந்த லேட்டஸ்ட் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பிரேமம் புகழ்

பிரேமம் புகழ்

சாய் பல்லவி 'பிரேமம்' படத்தின் மூலம் தென்னிந்தியா முழுவதும் பிரபலமானவர். இவர் தமிழில் 'கரு' திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகவுள்ளார். இதைத் தொடர்ந்து சூர்யா மற்றும் தனுஷுக்கு ஜோடியாக படங்களில் நடித்து வருகிறார்.

சூர்யா படத்தில்

சூர்யா படத்தில்

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள படம் 'தானா சேர்ந்த கூட்டம்'. இந்தப் படத்தை தொடர்ந்து செல்வராகவன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கிறார் சூர்யா. இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், சாய் பல்லவியும் நடிக்கிறார்.

தனுஷ் ஜோடியாக

தனுஷ் ஜோடியாக

பாலாஜி மோகன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'மாரி 2' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சாய் பல்லவி. இப்படத்தின் ஷூட்டிங் தென்காசி பகுதிகளில் நடைபெற்று வருகிறது. வெகு விரைவில் சென்னையில் ஷூட்டிங் நடைபெற உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சாய் பல்லவியின் லேட்டஸ்ட் போட்டோ

சாய் பல்லவியின் லேட்டஸ்ட் போட்டோ

இந்நிலையில் சமீபத்தில் சாய் பல்லவியின் கெட்டப் ஒன்றை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியாகிவிட்டனர். மேலும், "இது சாய் பல்லவி தானா?" என்று கேட்கும் அளவுக்கு அவரின் தோற்றம் இப்புகைப்படத்தில் முழுவதுமாக மாறியுள்ளது.

English summary
Sai pallavi celebrated by 'Premam', currently starring in many leading actors films. Fans are shocked to see the recent photo of Sai Pallavi. This latest photo of Sai Pallavi is going viral on social networks.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil