ப்பா.. பார்த்த உடனே பிடிச்சுப் போச்சே.. ரெளடி பேபிக்கு பிறகு சாய் பல்லவி என்ன ஒரு டான்ஸ்!

ஹைதராபாத்: சாய் பல்லவியின் புதிய தெலுங்கு பாடலான 'சரங்கதரியா' வெளியாகி வைரலாகி வருகிறது.

நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தெலுங்கில் உருவாகி உள்ள லவ் ஸ்டோரி படத்தில் இந்த பாடல் இடம்பெற்றுள்ளது.

இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் இந்த படம் உருவாகி வருகிறது. நடிகை சமந்தா தற்போது இந்த பாடலின் லிரிக் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

லவ் ஸ்டோரி

லவ் ஸ்டோரி

நயன்தாரா நடிப்பில் வெளியான கஹானி படத்தின் ரீமேக்கான நீ எங்கே என் அன்பே படத்தை இயக்கிய சேகர் கம்முலா, கடந்த 2017ம் ஆண்டு நடிகை சாய் பல்லவியை ஃபிடா எனும் தெலுங்கு படத்தில் அறிமுகப்படுத்தினார். இந்நிலையில், தற்போது மீண்டும் சாய் பல்லவி மற்றும் சமந்தாவின் கணவர் நாக சைத்தன்யா நடிக்கும் லவ் ஸ்டோரி படத்தை இயக்கி வருகிறார்.

ரெளடி பேபி

ரெளடி பேபி

நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி 2 படத்தின் ரெளடி பேபி பாடலில் அட்டகாசமான நடனம் ஆடிய சாய் பல்லவி ஏகப்பட்ட இளைஞர்களின் மனங்களை கொள்ளையடித்தார். இதுவரை எந்த தென்னிந்திய திரைப்பாடலும் எட்டாத உயரமான ஒரு பில்லியன் வியூக்களை பெற்று ரெளடி பேபி வரலாற்று சாதனை படைத்தது.

சரங்கதரியா

இந்நிலையில், ரெளடி பேபி பாடலுக்கு பிறகு மீண்டும் ஒரு அட்டகாசமான நடனத்தை நடிகை சாய் பல்லவி ஆடியுள்ளார். அவரது டான்ஸில் தற்போது லவ் ஸ்டோரியின் சரங்கதரியா பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. லிரிக் வீடியோவின் இடை இடையே சாய் பல்லவியின் நடனமும் க்யூட் ரியாக்‌ஷனும் ரசிகர்களை கவர்ந்திழுக்கிறது.

கேட்டாலும் பார்த்தாலும்

கேட்டாலும் பார்த்தாலும்

சரங்கதரியா பாடலை கேட்டாலும் பார்த்தாலும் அடுத்த நொடியே ரசிகர்களுக்கு பிடித்து விடும் வண்ணம் செம சூப்பராக உள்ளது. பவன் இசையில் மாங்லி எனும் பாடகி பாடும் இந்த பாடலை கேட்டு பாருங்கள், நிச்சயம் அவர் குரலுக்கு அடிமையாகி விடுவீர்கள். அப்படியொரு அட்டகாசமான வாய்ஸ் அவருக்கு.

சமந்தா வெளியீடு

சமந்தா வெளியீடு

தனது கணவர் நாக சைதன்யாவின் புதிய படமான லவ் ஸ்டோரி படத்தின் பாடலை தற்போது நடிகை சமந்தா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். மேலும், சாய் பல்லவியின் நடனத்தையும் க்யூட் ரியாக்‌ஷன்களையும் வெகுவாக பாராட்டி உள்ளார் சமந்தா.

டிரெண்டிங்கில் சாய் பல்லவி

டிரெண்டிங்கில் சாய் பல்லவி

ஆழமான நடிப்பு மற்றும் அமர்க்களமான நடனத்துக்கு சொந்தக்காரியான இந்த மலர் டீச்சரை எப்போதுமே ரசிகர்கள் மறக்க மாட்டார்கள். சாய் பல்லவி குறித்த எந்தவொரு அப்டேட் வெளியானாலும் அவரது ரசிகர்கள் ஆஜராகி டிரெண்ட் செய்யாமல் விடமாட்டார்கள். தற்போதும், #SaiPallavi ஹாஷ்டேக் டிரெண்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X