பாலிவுட்டில் களமிறங்கும் நடிகை சாய் பல்லவி? என்ன கதாபாத்திரம் தெரியுமா?
சென்னை : நடிகை சாய் பல்லவி மது மந்தேனா இயக்கத்தில் உருவாக உள்ள படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமாக உள்ளார்.
சாய் பல்லவியை பலருக்கும் மலர் டீச்சராகத்தான் தெரியும் அந்த அளவுக்கு பிரேமம் படத்தில் இயல்பாக நடித்து அனைவரின் மனதையும் கவர்ந்தார்.
தமிழ் மற்றும் மலையாள ரசிகர்களிடம் பிரபலமாக இருந்த சாய் பல்லவி தெலுங்கிலும் தனது கால் தடத்தை பதித்து தொடர்ந்து ஹிட் படங்களில் நடித்து வருகிறார்.

ரவுடி பேபி சாய்பல்லவி
மாரி படத்தின் வெற்றியைத் தொடர்ந்து மாரி 2 திரைப்படம் உருவானது. இதில், தனுஷ்,சாய்பல்லவி,ரோபோ சங்கர் ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தில் தனுஷூடன் ரவுடி பேபி பாடலுக்கு இவர் போட்ட ஆட்டம் சூப்பரோ சூப்பர். அந்த பாடலுக்கு பிறகு ஏ ரவுடி பேபி என, அனைவரையும் கொஞ்சும் அளவுக்கு, தரமான குத்தாட்டத்தை போட்டிருந்தார். இன்று வரை இந்த பாடல் யூடியூபில் டிரெண்டிங்கில் உள்ளது.

அடுத்தடுத்த படங்களில்
தனது திறமையானா நடிப்பால், அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகி வரும் சாய் பல்லவி, சமந்தாவின் கணவர் நாக சைத்தான்யாவுடன் இணைந்து லவ் ஸ்டோரி என்ற படத்தில் நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து ஷ்யாம் சிங்கா ராய்,விராத பர்வம் , கார்கி ஆகிய படங்களில் நடித்துள்ளார். இதில்,கார்கி படத்தில் சாய் பல்லவியின் நடிப்பை அனைவரும் பாராட்டு வகையில் இருந்தது. தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ் குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் புதிய படத்தில் கமிட்டாகி உள்ளார்.

பாலிவுட்டில் என்ட்ரி?
இந்நிலையில், சாய்பல்லவி, மது மந்தேனாவின் இயக்கத்தில் உருவாக உள்ள ராமாயண் படத்தில் ஒரு வலுவான கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. இதில், ரன்பீர் கபூர் ராமரின் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ள நிலையில், சாய்பல்லவி சீதாவாக நடிக்க உள்ளார். இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விரைவில் அறிவிப்பு
தீபிகா படுகோனியை சீதா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க தயாரிப்பாளர் அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். தீபிகா ஒரு சில படங்களில் கமிட்டாகி உள்ளதால், இந்த படத்தில் கால்ஷுட் தரமுடியவில்லை என்று கூறப்படுகிறது. மேலும், இந்த ராமாயண கதையில் ஹிருத்திக் ரோஷன் ராவணனாக நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.


Click it and Unblock the Notifications











