பருத்திவீரன்ல பொறுக்கி பாய்.. கார்த்தியை வெட்கப்பட வைத்த சாய் பல்லவி.. ரெட்ரோ பத்தி சொன்னதுதான் செம!
சென்னை: அஜித் குமாரின் விடாமுயற்சி படத்துக்கு போட்டியாக தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் நாக சைதன்யா, சாய் பல்லவி நடித்த தண்டேல் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தை தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் புரமோட் செய்யும் விதமாக சென்னை லீலா பேலஸில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நகா சைதன்யா, சாய் பல்லவி பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக நடிகர் கார்த்தி, இயக்குநர்கள் கார்த்திக் சுப்புராஜ், வெங்கட் பிரபு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
புஷ்பா 2 படத்தைத் தொடர்ந்து தேவி ஸ்ரீ பிரசாத் இசையில் இந்த படம் உருவாகியுள்ளது. நேற்று நடைபெற்ற விழாவில் தண்டேல் படத்தின் தமிழ் டிரெய்லரை நடிகர் கார்த்தி வெளியிட்டார்.

கார்த்தியின் பருத்திவீரன் படம் முதல் மெய்யழகன் படம் வரை அவர் அந்த படத்தில் நடிக்க செய்யும் விஷயத்தை குறிப்பிட்டு சாய் பல்லவி பேசியது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது. சோஷியல் மீடியாவில் சாய் பல்லவி ஹாஷ்டேக்கை டிரெண்ட் செய்து கார்த்தி பற்றி அவர் பேசிய காட்சிகளை ரசிகர்கள் அதிகளவில் ஷேர் செய்து வருகின்றனர்.
சக்சஸ் சாய் பல்லவி: பிரேமம் படத்தில் அறிமுகம் ஆன சாய் பல்லவி நடிப்பில் வெளியான படங்கள் பல வெற்றிப் படங்களாக மாறியுள்ளன. சில படங்கள் சொதப்பினாலும் அதிலும் சாய் பல்லவியின் நடிப்பு அனைவராலும் பேசப்படும் என்பதில் எந்தவொரு மாற்றுக் கருத்தும் இருக்க முடியாது என நினைக்கிறேன். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில், இந்த ஆண்டு பிப்ரவரி 7ம் தேதி நாக சைதன்யாவுடன் அவர் இணைந்து நடித்துள்ள தண்டேல் திரைப்படம் வெளியாகிறது. அந்த படத்திற்கான புரமோஷனை நேற்று சென்னையில் செய்திருந்தார் சாய் பல்லவி.

கார்த்தியின் புனிதத்தன்மை: சாய் பல்லவி ராமாயணா படத்தில் சீதையாக நடித்து வருவது குறித்து கார்த்தி பேசிய நிலையில், மேடையேறி பேசிய சாய் பல்லவி கார்த்தியின் சமீபத்திய படமான மெய்யழகன் படத்தை பார்த்தேன். அந்த படத்தை பார்த்தால், யாராக இருந்தாலும் ஒரு சின்ன மனமாற்றம் நிச்சயம் நிகழும் என நம்புகிறேன். பருத்திவீரன் படத்தில் ஒரு பக்காவான பொறுக்கி பாயாக நடித்திருப்பார். சிறுத்தை, சமீபத்தில் வெளியான மெய்யழகன் படத்தில் வெகுளியான நல்ல உள்ளம் கொண்ட மனிதராக அப்படியே இருப்பார். இயல்பாகவே அவருக்குள் Purity (புனிதத்தன்மை) இருந்தால் மட்டும் தான் திரையில் அதை அப்படியே கடத்த முடியும் என நினைக்கிறேன் என கார்த்தியை பாராட்டி வெட்கப்படவே வைத்துவிட்டார் சாய் பல்லவி.
ரெட்ரோ படம் பற்றி: செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்த என்ஜிகே படத்தில் நடித்துள்ள சாய் பல்லவி தான் சூர்யாவோட ஃபேன் என்றும் ரெட்ரோ படத்தின் ப்ரோமோவை பார்த்து மிரண்டு போய்விட்டேன். கார்த்திக் சுப்புராஜ் சார் சூர்யா சாரை வேறமாதிரி செதுக்கிட்டு வறிங்கன்னு தெரியுது. ரெட்ரோ படத்துக்காக ஐ எம் வெயிட்டிங் என பேச அரங்கத்தில் இருந்த சூர்யா ரசிகர்கள் சாய் பல்லவியின் பேச்சைக் கேட்டு ஆர்ப்பரித்தனர். நாக சைதன்யா நடித்துள்ள தண்டேல் திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெற்றிப் படமாக மாறும் என கார்த்தி உள்ளிட்ட சிறப்பு விருந்தினர்கள் வாழ்த்தி பேசினர்.


Click it and Unblock the Notifications











