Don't Miss!
- News
லட்டு எல்லாம் பழசு.. பிரசாதமாக "பர்கர், சாண்ட்விச்" தரும் சென்னை கோயில் -இன்னும் பல விசயம் இருக்கு
- Sports
"ஒரே கல்லில் 2 மாங்காய்" ஒரே இன்னிங்ஸில் தோனி - சச்சின் சாதனை தகர்த்த ரிஷப் பண்ட்.. எப்படி தெரியுமா
- Finance
ஒரு கப் டீ 20, சேவை கட்டணம் ரூ.50.. மொத்த கட்டணம் ரூ.70.. சதாப்தி ரயில் பயணிகள் ஷாக்!
- Automobiles
டாடாவிற்கு பக்கத்துல கூட யாரும் வர முடியாது! மாருதிலாம் சீன்லயே இல்ல! விஷயத்தை கேக்கும்போதே ஆச்சரியமா இருக்கு!
- Lifestyle
இந்த வயசுக்கு மேல ஆண்களுக்கு இதய நோய் மற்றும் புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு ரொம்ப அதிகமாம்.. ஜாக்கிரதை!
- Technology
Samsung: கொஞ்ச காசு இப்போ கட்டுங்க, மிச்சம் 12 மாசம் கழிச்சு கொடுங்க.. ஸ்மார்ட்TV மீது சலுகை!
- Travel
அழகும் சாகசமும் நிறைந்த சுதாகட் கோட்டையில் ட்ரெக்கிங் செய்யலாம் வாருங்கள்!
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
நாக சைதன்யாவை புகழ்ந்த நடிகை.. ஏற்கனவே பல பிரச்சனை.. இதுல இது வேறயா ?
சென்னை : தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை பிரபல நடிகை புகழ்ந்து பேசி உள்ளது. தற்போது ரசிகர்களால் பேசு பொருளாகி உள்ளது.
தெலுங்கு நடிகர் நாகார்ஜூன் மற்றும் அமலா தம்பதியினரின் மகனான நாக சைதன்யா, முன்னணி நடிகை சமந்தாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
திருமணத்திற்கு பின்னும் சமந்தா திரைப்படங்களில் நடித்து வந்தார். இணைபிரியாத தம்பதிகளாக இருந்த இவர்கள். கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிரிவதாக அறிக்கை வெளியிட்டுவிட்டு பிரிந்தனர். இது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியது.
விக்ரம்
–
பா.ரஞ்சித்
இணையும்
சியான்
61...
ஷுட்டிங்
எப்போ...வெளியான
சூப்பர்
தகவல்

சமந்தா - நாக சைதன்யா
இதையடுத்து, சமந்தா மற்றும் நாக சைத்தன்யா இருவருமே படங்களில் கவனம் செலுத்தி பிஸியாக நடித்து வருகின்றனர். விவாகரத்துக்கு பின் சமந்தாவின் மார்கெட் எகிறிவிட்டது என்றுதான் சொல்லவேண்டும். குறிப்பாக புஷ்பா படத்தில் ஊ சொல்றியா மாமா பாடலுக்கு சமந்தா போட்ட குத்தாட்டம் அவரை புகழின் உச்சிக்கே கொண்டு சென்றுவிட்டது எனலாம்.

நடிப்பில் கவனம்
விவாகரத்துக்கு பின் சமந்தா கவர்ச்சியில் தாராளம் காட்டி வருகிறார். அது மட்டும் இல்லாமல் சகுந்தலம், யசோதா, ஹாலிவுட் வெப் தொடர் என பிஸியாக நடித்து வருகிறார். யசோதா படத்தினை ஸ்ரீதேவி மூவிஸ் தயாரித்துள்ளனர். இந்த படம் தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம்,ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் தயாராகிறது. மணிசர்மா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

நாக சைதன்யா டேட்டிங்
சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா, தற்போது நடிகை சோபிதா துலிபலாவுடன் டேட்டிங் சென்று வருவதாக கிசுகிசுக்கப்படுகிறது. ஹூப்ளியில் உள்ள நாக சைதன்யாவின் வீட்டில் இருவரும் நெருக்கமாக இருந்ததாகவும், நாக சைதன்யா மீண்டும் காதலில் விழுந்திருக்கலாம் என்ற செய்திகாட்டுத் தீ போல பரவி வருகிறது.

சாய் பல்லவி
இந்நிலையில், தெலுங்கில் வெளியான ‘விரட பர்வம்' படத்தில் நடித்த நடிகை சாய் பல்லவி, அப்படத்தில் வெண்ணிலா என்ற கதாபாத்திரத்தில் அட்டகாசமாக நடித்திருந்தார். படம் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. பலரும் இப்படத்தில் நடித்த சாய் பல்லவியை பாராட்டி வருகின்றனர்.

ஏற்கனவே பல பிரச்சனை
இந்நிலையில், நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட சாய் பல்லவியிடம், அவர் நடித்த சில ஹீரோக்களின் புகைப்படங்களை காட்டி, அவர் பற்றி கேட்கப்பட்டது. ‘லவ் ஸ்டோரி'படத்தில் நடித்த நாக சைதன்யாவின் படம் காட்டப்பட்ட போது, நாக சைதன்யா மிகவும் இனிமையான மனிதர், இயல்பிலேயே அவருக்கு உதவி செய்யும் மனம் உண்டு என்று புகழ்ந்து இருந்தார். இதைக்கேட்ட ரசிகர்கள் பலர் ஏற்கனவே அவருக்கு விவாகரத்து, டேட்டிங் என பல பிரச்சனை, இதுல வேற நீங்க புகழ்ந்தால் எப்படி என்று கேட்டு வருகின்றனர்.