Sai Pallavi: சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி.. SK 21ல் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா?
சென்னை: கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் சிவகார்த்திகேயன், சாய் பல்லவி நடிக்கும் SK21 படத்தின் பூஜை இன்று கோலாகலமாக போடப்பட்ட நிலையில், அதன் வீடியோ வெளியாகி டிரெண்டாகி வருகிறது.
கவுதம் கார்த்திக்கை வைத்து ரங்கூன் படத்தை இயக்கிய இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி அதன் பிறகு பிக் பாஸ் நிகழ்ச்சிகளை இயக்கி வந்தார்.
இந்நிலையில், அவர் இயக்கத்தில் உருவாக உள்ள இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க உள்ள சாய் பல்லவிக்கு பெரிய தொகை சம்பளமாக பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

விஜய், அஜித்துக்கு நோ சொன்ன சாய் பல்லவி: நடிகை சாய் பல்லவி நிறைய படங்களை தேர்வு செய்து நடிக்காமல் நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார். கடந்த ஆண்டு சாய் பல்லவி நடிப்பில் வெளியான கார்கி திரைப்படம் மிகச் சிறந்த படமாக பலராலும் பாராட்டப் பெற்றது.
நானி உடன் அவர் இணைந்து நடித்திருந்த ஷியாம் சிங்காராய் படத்தில் தேவதாசி கதாபாத்திரத்தில் நடித்து நடிப்பில் மிரட்டி இருந்தார் சாய் பல்லவி. விஜய் மற்றும் அஜித் படங்களில் நடிக்க வாய்ப்புகளை கால்ஷீட் காரணமாக தவிர்த்து விட்டார் சாய் பல்லவி என்கிற பேச்சுக்களும் சமீபத்தில் அடிபட்டன.

சிவகார்த்திகேயனுக்கு ஜோடியான சாய் பல்லவி: ஆரம்பத்தில், ஹன்சிகா, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ் என முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டு நடித்து வந்த சிவகார்த்திகேயன் அதன் பிறகு பிரியங்கா மோகன், அதிதி ஷங்கர் என இளம் நடிகைகளுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார்.

இந்நிலையில், மீண்டும் முன்னணி நடிகையான சாய் பல்லவியுடன் இந்த எஸ்கே 21 படத்தில் இணைந்து நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். கமல் தயாரிப்பில் உருவாக உள்ள இந்த படம் ராணுவ வீரரின் கதையை மையமாக கொண்டு உருவாக்கப்பட உள்ளதாகவும் லியோ, டன்கி படங்களை தொடர்ந்து இந்த படக்குழுவும் விரைவில் காஷ்மீரில் ஷூட்டிங் நடத்தப் போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

டிரெண்டான சாய் பல்லவி: எளிமையாக சுடிதார் அணிந்துக் கொண்டு நடிகை சாய் பல்லவி சிவகார்த்திகேயன் உடன் எஸ்கே 21 படத்தின் பூஜையில் கலந்து கொண்டு குத்து விளக்கு ஏற்றி சிவகார்த்திகேயன் அருகே அமர்ந்து கொண்டு தேர்வு எழுதுவது போன்ற காட்சிகள் படமாக்கப்பட்ட நிலையில், சாய் பல்லவியின் அழகை பார்த்த அவரது ரசிகர்கள் சாய் பல்லவியின் ஸ்டில்களையும் சாய் பல்லவியின் வீடியோக்களையும் #SaiPallavi ஹாஷ்டேக்கில் டிரெண்ட் செய்து வருகின்றனர்.
சம்பளம் இத்தனை கோடியா?: கமல் தயாரிப்பில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய் பல்லவி எஸ்கே 21 படத்தில் நடிக்க ஓகே சொன்ன நிலையில், இந்த படத்தில் அவருக்கு 2.5 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பொதுவாகவே அதிகமாக தனது சம்பளத்தை ஏற்றாமல் வெறும் 2 கோடி சம்பளத்தில் நடித்து வந்த சாய் பல்லவிக்கு இந்த படத்தில் தான் அதிகபட்சமாக 2.5 கோடி ரூபாய் சம்பளத்தை வழங்க உள்ளனர் என பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன.
சீதா ராமம் படத்தில் மிருணாள் தாகூர் நடித்ததை போலவே சாய் பல்லவியின் கதாபாத்திரத்துக்கு இந்த படத்தில் செம வெயிட்டான ரோல் என்பதால் தான் சம்பளத்தை எல்லாம் தாண்டி சிவகார்த்திகேயன் படத்தில் நடிக்க சம்மதித்துள்ளார் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











