ஸ்லீவ்லெஸ் சேலையில் மனதை உருக்கும் மலர் டீச்சர்.. அந்த வெட்கத்துக்கே 100 கோடி கொடுக்கலாம்!
சென்னை : ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகி இருந்த நடிகை சாய் பல்லவி சமீபத்தில் அதில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை அளித்திருந்தது.
மிகச் சிறந்த நடிகையாக மட்டுமல்லாமல் மிகச் சிறந்த டான்ஸராகவும் கலக்கிக் கொண்டிருக்கும் சாய்பல்லவி ரவுடி பேபி பட பாடலை தொடர்ந்து சரங்க தரியா பாடலும் மிகப்பெரிய வைரல் ஆகியுள்ளது.
இந்த நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் புரமோஷனுக்காக ஸ்லீவ்லெஸ் சேலையில் சும்மா கும்முன்னு வெட்கம் ததும்பத் ததும்ப போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆளுக்கொரு மாதிரி வருணித்து வருகின்றனர்.

முதல் படத்திலேயே
மலர் டீச்சராக அனைவரது இடங்களிலும் முதல் படத்திலேயே இடம்பிடித்த நடிகை சாய் பல்லவி தென்னிந்தியாவில் மோஸ்ட் வான்டட் ஹீரோயினாக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழில் மிக சொற்ப அளவே திரைப்படங்களில் நடித்திருந்தாலும் இவர் நடிக்கும் படங்களை காணவே ரசிகர்கள் தவம் கிடக்கின்றனர்.

லவ் ஸ்டோரி
தியா,மாரி 2,என் கே ஜி,பாவக் கதைகள் என இவர் தமிழில் நடித்த அனைத்தும் தனிச்சிறப்பை பெற்றிருக்க இப்போதைக்கு தமிழில் எந்த ஒரு திரைப் படங்களில் நடிக்காமல் தெலுங்கில் கைநிறைய படங்களுடன் நடித்து வருகிறார். அந்த வகையில் நாக சைதன்யாவுடன் ஜோடி போட்டுள்ள லவ் ஸ்டோரி மிக விரைவில் வெளியாக உள்ளது.
Recommended Video

வெறித்தனமான நடனத்தை
லவ் ஸ்டோரி படத்திலிருந்து பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சக்கைபோடு போட்ட நிலையில் சாரங்க தரியா பாடல் தற்போது பட்டி தொட்டி எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. லிரிக்ஸ் வெர்ஷனில் சாய்பல்லவியின் வெறித்தனமான நடனத்தை அனைவரும் அணு அணுவாக ரசித்து உள்ளனர்.

அந்த வெட்கத்துக்கு 100 கோடி
இந்த நிலையில் லவ் ஸ்டோரி படத்தின் புரமோஷன் பணிகள் விறு விறு வேகத்தில் நடைபெற்று கொண்டிருப்பதால் அதில் கலந்துகொள்ள வந்திருந்த நடிகை சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் சேலையில் திகட்டாத அழகில் வெட்கம் ததும்பத் ததும்ப போஸ் கொடுத்திருக்கும் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் ஆளுக்கொரு மாதிரி வருணித்து வருகின்றதோடு அந்த வெட்கத்துக்கு 100 கோடி கொடுக்கலாம் என பேசி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











