கவுரி நந்தா கேரக்டரில் நடிக்கிறாரா..? 'அய்யப்பனும் கோஷியும்' பட ரீமேக்கில் சாய் பல்லவி?

By

சென்னை: அய்யப்பனும் கோஷியும் ரீமேக்கில் சாய்பல்லவி நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம், 'அய்யப்பனும் கோஷியும்'. பிருத்விராஜ், பிஜூ மேனன் நடித்திருந்தனர்.

பிருத்விராஜ், முன்னாள் ராணுவ வீரராகவும் பிஜூ மேனன், சப் இன்ஸ்பெக்டராகவும் நடித்திருந்தனர்.

சிம்பிளான கதை

சிம்பிளான கதை

இதை இயக்கியவர் சச்சி என்ற கே.ஆர்.சச்சிதானந்தம். இந்தியா முழுவதும் பரபரப்பாக பேசப்பட்ட படம் இது. சிம்பிளான ஈகோ கதையை, அழகான திரைக்கதை மூலம், பிரமாண்டமாக உருவாக்கி இருந்தார் சச்சி. இந்தப் படம் தியேட்டரில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருந்த போதுதான் லாக்டவுன் அறிவிக்கப்பட்டது.

அறுவைச் சிகிச்சை

அறுவைச் சிகிச்சை

இந்நிலையில், இடுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைப் பெற்று வந்த இந்தப் படத்தின் இயக்குனர் சச்சி மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்தார். இது மலையாள சினிமா மட்டுமல்லாமல், இந்திய சினிமாவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இப்போது இந்தப் படம், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரீமேக் ஆக இருக்கிறது.

அறிவிக்க இருக்கிறார்

அறிவிக்க இருக்கிறார்

தமிழில், இதன் ரீமேக் உரிமையை ஆடுகளம், பொல்லாதவன், ஜிகிர்தண்டா படங்களின் தயாரிப்பாளர் கதிரேசன் வாங்கியுள்ளார். சசிகுமார் ஒரு கேரக்டரில் நடிக்க இருக்கிறார். மற்ற நடிகர், நடிகைகள் இன்னும் முடிவாகவில்லை. தற்போது லாரன்ஸ் நடிக்கும் ருத்ரன் படத்தை தயாரிக்கும் கதிரேசன், அதன் பிறகு இந்தப் படம் பற்றி அறிவிக்க இருக்கிறார்.

பவன் கல்யாண், ராணா

பவன் கல்யாண், ராணா

இந்தியில், இதன் ரீமேக் உரிமையை ஜான் ஆபிரஹாம் வாங்கி இருக்கிறார். அதில் அவர் ஒரு கேரக்டரில் நடிக்கிறார். இதன் தெலுங்கு ரீமேக்கில் பவன் கல்யாணும், ராணாவும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. பவன், இன்ஸ்பெக்டர் கேரக்டரிலும் ராணா, ஓய்வு பெற்ற ராணுவ வீரர் கேரக்டரிலும் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

மலையகப் பெண்

மலையகப் பெண்

படத்தை வெங்கி அட்லுரி இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் பவன் கல்யாண் மனைவியாக, மலையகப் பெண் கேரக்டரில் சாய் பல்லவி நடிக்க இருப்பதாகத் தெரிகிறது. அவரிடம் படக்குழு பேசியிருப்பதாகவும் அதிகாரபூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் தெரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X