பிளாக் பஸ்டர் ஹிட் அடித்த கார்கி..இதுவரையிலான மொத்த வசூல்..இத்தனை கோடியா?

சென்னை : கௌதம் ராமசந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி நடித்துள்ள கார்கி திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களாகி உள்ள நிலையில் படம் வசூலித்துள்ள தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது.

Recommended Video

Gargi Movie review | Yessa ? Bussa ?| கார்கி | Sai Pallavi |*Review

பிளாக்கி ஜெனி மற்றும் மை லெஃப்ட் புட் ப்ரெடக்ஷன் தயாரித்துள்ள கார்கி படத்தில் சாய் பல்லவி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கௌதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் கார்கி படத்தை 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக சூர்யா ஜோதிகா வெளியிட்டுள்ளனர்.

இப்படத்தில் காளி வெங்கட், ஆர்.எஸ்.சிவாஜி, ஜெயப்பிரகாஷ், லிவிங்ஸ்டன், சரவணன், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

கார்கி

கார்கி

சாய் பல்லவி லீட் ரோலில் நடித்துள்ள கார்கி திரைப்படம் ஜூலை 15ந் தேதி திரையரங்கில் வெளியாகி நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது. படம் பார்த்தவர்கள் அனைவரும் படத்தை பாராட்டி தமிழ் சினிமாவின் மிக முக்கியமான படம் எனபுகழ்ந்து வருகின்றனர். படம் வெளியாவதற்கு முன்பே படத்தை பார்த்த உதயநிதி, கார்க்கி படத்தை குழந்தைகள் மற்றும் பெற்றோர்கள் கட்டாயம் பார்க்க வேண்டும் என்றார்.

மகளின் பாச போராட்டம்

மகளின் பாச போராட்டம்

9 வயது சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று ஒருவர் பின் ஒருவராக பாலியல் பலாத்காரம் செய்கிறார்கள். 5 பேரில் ஒருவராக அடுக்கு மாடி குடியிருப்பின் காவலாளியான பிரமானந்தாவை கைது செய்து செய்து காவலில் வைக்கிறது போலீஸ். வேலைக்குப்போன அப்பா வீடு திரும்பவில்லையே என்று பிரமானந்தத்தின் மகள் கார்கி தேட ஆரம்பிக்கிறார்.

சுவாரசியமான கதை

சுவாரசியமான கதை

அப்பாவை போலீஸ் விசாரணைக்காக அழைத்து சென்றது தெரியவருகிறது. என் அப்பா நிரபராதி உறுதியாக நம்பும் கார்கி போலீஸ் அதிகாரியிடம் வாதாடுகிறார். சிறையில் அடைக்கப்பட்ட அப்பாவை வெளியே கொண்டுவர பல முயற்சிகளை செய்கிறார். இறுதியில் தந்தையை காப்பாற்றினாரா? உண்மைக்குற்றவாளி யார் என்பதே படத்தின் கதை.

மூன்று நாள் வசூல்

மூன்று நாள் வசூல்

கார்கி திரைப்படம் வெளியாகி நான்கு நாட்களாகி உள்ள நிலையில் படம் வசூலித்துள்ள தொகை குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதில், பாக்ஸ் ஆபிஸில் முதல் 2 நாட்களில் மட்டும் சுமார் ₹ 1.65 கோடியை வசூலித்துள்ளதாகவும், வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வசூல் அதிகரித்து 2.75 கோடியை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், படத்திற்கு நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டு இருப்பதால், வசூல் மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X