சாய்பல்லவி நடித்துள்ள படத்தின் ரிலீஸ் ஒத்திவைப்பு... ரசிகர்கள் அப்செட்!
ஹைதராபாத் : என் ஜி கே, பாவ கதைகள் ஆகிய திரைப்படங்களுக்கு பிறகு தமிழில் எந்த ஒரு படத்திலும் நடிகை சாய் பல்லவி கமிட் ஆகவில்லை.
ஃபிடா இயக்குனர் சேகர் கும்முலா உடன் மீண்டும் இணைந்துள்ள லவ் ஸ்டோரி படத்தில் நாக சைதன்யா ஹீரோவாக நடித்துள்ளார்.
வரும் ஏப்ரல் 16-ஆம் தேதி லவ் ஸ்டோரி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இப்பொழுது திடீரென அதன் ரிலீஸ் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

பிரேமம்
மிகத் திறமையான நடிகை அட்டகாசமான டான்ஸர் என தென்னிந்திய சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி பிரேமம் படத்தின் மூலம் அறிமுகமானவர். தொடர்ந்து தமிழ் தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

லவ் ஸ்டோரி
கவர்ச்சி காட்டாமலேயே முன்னணி நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்து இருக்கும் சாய் பல்லவி நடிக்கும் திரைப்படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் தனி கவனம் இருந்து வர இப்பொழுது தெலுங்கில் லவ் ஸ்டோரி என்ற திரைப்படத்தில் நாகசைதன்யா உடன் இணைந்து ஜோடி போட்டு நடித்துள்ளார்.

ராவான கதையில்
ஃபிடா வெற்றியை தொடர்ந்து மீண்டும் இயக்குனர் சேகர் கும்முலா உடன் இணைந்து லவ் ஸ்டோரி படத்தில் பணியாற்றியுள்ள சாய் பல்லவி இதைத்தொடர்ந்து விராட்ட பர்வம் என்ற ராவான கதையில் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

சாரங்க தரியா
கிராமத்திலிருந்து சிட்டிக்கு வேலைத் தேடிவரும் நபர்களாக மௌனிகா என்ற ரோலில் சாய்பல்லவியும் ரேவந்த் என்ற ரோலில் நாக சைதன்யாவும் நடித்துள்ளனர். ஃபிடா வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் சாய்பல்லவி இணைந்துள்ள லவ் ஸ்டோரி படத்திற்கு ரசிகர்களிடம் பலமடங்கு எதிர்பார்ப்பு இருக்கையில் சில வாரங்களுக்கு முன்பு இந்த படத்தில் இருந்து வெளியான சாரங்க தரியா பாடல் இணைய தளத்தில் ட்ரெண்ட் ஆனது.

ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது
ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இந்நிலையில் லவ் ஸ்டோரி படம் வரும் ஏப்ரல் 16ஆம் தேதி வெளியாகிறது என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருந்தது. இந்தநிலையில் கொரானாவின் இரண்டாவது அலை மிக தீவிரமடைந்து வேகமாகப் பரவி வருவதால் தற்பொழுது இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதை அறிந்த ரசிகர்கள் அப்செட்டில் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











