அடுத்த 100 மில்லியன்.. இறங்கி கலக்கும் சாய் பல்லவி.. இப்போ எந்த பாட்டுக்கு தெரியுமா?
ஹைதராபாத்: சாய் பல்லவியின் பாடல்கள் வெளியானாலே பல நூறு மில்லியன் பார்வைகளை தாண்டி சாதனை படைத்து வருகிறது.
பிரேமம் படத்தில் மலர் டீச்சர் திடீரென போடும் அந்த குத்தாட்டம் அந்த படத்தை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றியது.
1 பில்லியனை கடந்து ரவுடி பேபி பாடல் உலக சாதனை படைத்த நிலையில், சாய் பல்லவியின் லேட்டஸ்ட் பாடல் 100 மில்லியன் பார்வைகளை கடந்து வைரலாகி வருகிறது.
அடுத்த பிரபுதேவா
விஜய் டிவியில் 2008ம் ஆண்டு நடைபெற்ற உங்களில் யாரு அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் டான்சராக கலந்து கொண்டார். 2009ம் ஆண்டு ஈ டிவியில் நடைபெற்ற தீ அல்டிமேட் டான்ஸ் ஷோவில் ஃபைனலிஸ்ட்டாக கலக்கினார். முறையாக நடனத்தை கற்றுக் கொள்ளாவிட்டாலும், அதன் மீது உள்ள அளவு கடந்த ஆர்வம் சாய் பல்லவியை சிறந்த நடனக் கலைஞராக மாற்றி உள்ளது.

மருத்துவ மாணவி
தமிழ்நாட்டில் உள்ள கோத்தகிரியில் பிறந்த சாய் பல்லவி. பள்ளிப் படிப்பை கோயம்புத்தூரில் பயின்றார். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்து மருத்துவப் படிப்பை பயின்றுள்ள சாய் பல்லவி வெளிநாட்டு மருத்துவராகும் தேர்வை சமீபத்தில் திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் எழுதிய போது பலரும் அவரிடம் செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

ஒரு பில்லியன்
நூறு மில்லியன் பார்வைகளை ஒரு பாடல் யூடியூப் தளத்தில் கடப்பதே பெரிய சாதனையாக பார்க்கப்படும் நிலையில், தனுஷின் மாரி 2 படத்தில் அவருடன் இணைந்து சாய் பல்லவி போட்ட அந்த ரவுடி பேபி டான்ஸ் வீடியோவை சுமார் ஒரு பில்லியன் ரசிகர்களுக்கும் மேல் கண்டு களித்து உலகளவில் டிரெண்ட் ஆக்கினர்.

சரங்கதரியா
இந்நிலையில், அடுத்த வைரல் ஹிட்டாக மாறியுள்ளது நடிகை சாய் பல்லவியின் சரங்கதரியா பாடல். டோலிவுட் நடிகர் நாக சைதன்யா நடிப்பில் உருவாகி உள்ள லவ் ஸ்டோரி படத்தில் சாய் பல்லவி நாயகியாக நடித்து வருகிறார். இயக்குநர் சேகர் கம்முலா இயக்கியுள்ள அந்த படத்தில் இடம்பெற்ற சரங்கதரியா பாடல் தற்போது 100 மில்லியன் வியூக்களை கடந்து சாதனை படைத்து டிரெண்டாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











