சாய் பல்லவியின் ‘சரங்க தரியா‘ பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை !

சென்னை : லவ் ஸ்டோரி படத்தில் இடம் பெற்றுள்ள 'சரங்க தரியா' என்ற பாடல் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.

சேகர் கம்முலாவின் இயக்கத்தில் உருவாகி வரும் லவ் ஸ்டோரி என்ற படத்தில் நாக சைத்தன்யாவுக்கு ஜோடியாக சாய் பல்லவி நடித்துள்ளார்.

இப்படம் ஏப்ரல் 16ந் தேதி வெளியாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக படம் வெளியாவது தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இப்படத்தின் சரங்க தரியா பாடலின் லிரீக் வீடியோக வெளியாகி சாதனை படைத்துள்ளது.

எதார்த்தமான நடிப்பு

எதார்த்தமான நடிப்பு

அளவான அழகு, எடுப்பானநிறம், எதார்த்தமான நடிப்பு என நம்மை கட்டிப்போட்டுள்ளவர் தான் நடிகை சாய்பல்லவி. எப்போதும் தலைமுடியை விரித்து விட்டுக்கொண்டு இயல்பா இருக்கும் சாய் பல்லவிக்கு முகத்தில் இருக்கும் பருக்களும் ஆயிரம் கவிதைப்பாடி வர்ணிக்கும்.

மலர் டீச்சர்

மலர் டீச்சர்

மானா மயிலா நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் தனது தடத்தைப்பதித்தார் சாய் பல்லவி. இதையடுத்து பிரமேம் திரைப்படத்தில் மலர் டீச்சராக அறிமுகமான அனைவரின் ஃபேவரைட் கனவு நாயகி ஆனார் சாய் பல்லவி. நடிப்பு நடனம் என எது கிடைத்தாலும் அடித்து தூள் கிளப்பி விடுவார் சாய் பல்லவி.

ரௌடி பேபி

ரௌடி பேபி

தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் பல படங்களில் நடித்து வந்த இவர், தமிழில் தியா என்ற படத்தில் நடித்தார். இதையடுத்து,தனுஷூடன் மாரி 2படத்தில் நடித்தார். இந்த படத்தில் இடம் பெற்ற ரௌடி பேபி பாடலில் தனது தாறுமாறான நடனத்தால் அனைவரையும் வாய் பிளக்க வைத்துவிட்டார் சாய் பல்லவி. இதையடுத்து சூரியாவுடன் என்ஜிகே படத்தில் நடித்தார். தற்போது ஒரு சில படங்களில் நடித்து வருகிறார்.

200 மில்லியன் பார்வையாளர்கள்

தற்போது இவர் நாக சைதன்யாவுடன் லவ் ஸ்டோரி படத்தில் நடித்துள்ளார். இப்படத்தின் சரங்க தரியா என்ற பாடலின் லிரிக் வீடியோ வெளியாகி உள்ளது. இதில் சாய் பல்லவியின் தாறுமாறான சில நடன காட்சி இடம் பெற்றுள்ளது. இப்பாடல் வெளியான இரண்டே மாதத்தில் 200 மில்லியன் பார்வையாளர்களை கடந்து புதிய சாதனை படைத்துள்ளது. இதனை சாய்பல்லவியின் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X