படத்தை விட்டு விலகிவிடுவேன்: வாரிசு நடிகருக்கு கன்டிஷன் போட்ட சாய் பல்லவி?

By Siva

ஹைதராபாத்:படத்தை விட்டு வெளியேறிவிடுவேன் என்று சாய் பல்லவி கன்டிஷன் போட்டுள்ளாராம்.

வேணு உடுகுலா இயக்கத்தில் ராணா ஹீரோவாக நடிக்க உள்ள படம் விரத பர்வதம் 1992. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி நடிக்கிறார். முதலில் ஷர்வானந்த் தான் ஹீரோவாக நடிப்பதாக இருந்தது.

அதன் பிறகு ராணா ஹீரோவாக ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

சாய் பல்லவி

சாய் பல்லவி

விரத பர்வதம் 1992 படத்தின் ஷூட்டிங் தள்ளிக் கொண்டே போகிறது. ராணாவால் தான் படப்பிடிப்பு தாமதம் ஆவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சாய் பல்லவி இயக்குநர் மற்றும் ராணாவுக்கு கன்டிஷன் போட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கோபம்

கோபம்

படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று ஒரு தேதியை சொல்லாவிட்டால் படத்தில் இருந்து விலகிவிடுவேன் என்று சாய் பல்லவி தெரிவித்துள்ளாராம். இதையடுத்து படப்பிடிப்பை விரைவில் துவங்க வேண்டிய கட்டாயத்தில் படக்குழு உள்ளதாம். சாய் பல்லவியால் ராணா தனது பிற வேலைகளுக்கு இடையே விரத பர்வதம் படத்தை துவங்க திட்டமிட்டுள்ளாராம்.

படம்

படம்

ராணா விரத பர்வதம் படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக குறைத்து ஒல்லிக்குச்சியாகியுள்ளார். இந்த படத்தில் பாலிவுட் நடிகை தபு மனித உரிமை ஆர்வலராக நடிக்கிறாராம். சாய் பல்லவி கன்டிஷன் போட்டதை அடுத்து ஜூன் மாதம் படப்பிடிப்பை துவங்குகிறார்களாம்.

ப்ரியாமணி

ப்ரியாமணி

விரத பர்வதம் படத்தில் ப்ரியாமணி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ப்ரியாமணி திருமணத்திற்கு பிறகு நடிக்கும் தெலுங்கு படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X