வெடிகுண்டு சத்தங்களுக்கு இடையே... சாய் பல்லவியின் அழகான காதல்…வைரலாகும் விராட்டா பர்வம் டீசர் !

சென்னை : சாய் பல்லவி மற்றும் ராணா, நந்திதா தாஸ் நடித்துள்ள விராட்டா பர்வம் படத்தின் டீசர் வெளியாகி சக்கைப்போடு போட்டு வருகிறது.

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி வெளியிட்ட இந்த டீசர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இதில் பிரியாமணி மற்றும் ஈஸ்வரி ராவ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

புரட்சி வீரன்

புரட்சி வீரன்

புரட்சி, வீரன் என 1990 களின் நக்சலைட் இயக்கத்தின் பின்னணியில் இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில், ராணா மற்றும் சாய்பல்லவி மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இதில் ஹீரோ ராணாவை விட சாய்பல்லவிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

ஆக்ரோஷமான குரல்

ஆக்ரோஷமான குரல்

டீசரின் ஆரம்பமே புரட்சிகர இலக்கியங்களை எழுதும் நக்சலைட் தலைவரான ராணா டகுபதியின் கதாபாத்திரத்துடன் தொடங்குகிறது. ஆக்ரோஷமான குரலில் விடுதலை என்னாளோ என்று தொடங்கும் வரியும் பின்னணி இசையும் வெடி குண்டு சத்தமும் மெய்சிலிர்க்க வைக்கிறது.

போர்க்களத்தில் காதல்

போர்க்களத்தில் காதல்

புயலுக்கு பின் வரும் அமைதியாக, சாய்பல்லவியின் காதல் அமைந்துள்ளது கிருஷ்ணனுக்காக மீரா பாய் , பெத்தவங்களை எப்படி விட்டுவந்தாளோ அதுப்போல நானும் உனக்காக எல்லாத்தைவும் விட்டுவரேன். உனக்காக இப்போவே இறந்தாலும் பரவால என்ற வசனத்தில் காதல் வரி சொட்டுகிறது. மேலும், காதலுக்கு இத்தனை சக்தி இருக்கா என்று கேட்கும் இடமும் அழகான காதல் புரிதலாக அமைந்துள்ளது. காதல் பித்தால், அவள் போர்க்களத்தில் அவனுடன் சேருவதற்கான அபாயகரமான பயணத்தை மேற்கொள்கிறாள், அது அவளுடைய வாழ்க்கையை தலைகீழாக மாற்றிவிடுமா.

எதார்த்தமாக

எதார்த்தமாக

"ராணா, சாய் பல்லவி மற்றும் நந்திதா தாஸ் கதாபாத்திரங்களுக்கு இடையிலான கருத்து மோதல்கள் படத்தின் முக்கிய கருப்பொருளாக அமைகின்றன. படத்தின் உள்ளடக்கம் குறித்து வெவ்வேறு துறைகளில் இருந்து மாறுபட்ட கருத்துக்களைப் பெறுவதற்கான வாய்ப்புகள் இருந்தபோதிலும், இயக்குனர் வேணு உடுகுலா கதையை மிகவும் யதார்த்தமான அணுகுமுறையுடன் விவரிக்க உறுதியாக இருக்கிறார்.

ஏப்ரல் 30ந் தேதி ரிலீஸ்

ஏப்ரல் 30ந் தேதி ரிலீஸ்

கேரளா, கரீம்நகர் மற்றும் தெலுங்கானாவின் வாரங்கல் மாவட்டங்களில் விராட்ட பர்வம் படமாக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் ஈஸ்வரி ராவ், பிரியாமணி மற்றும் ஜரீனா வஹாப் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். விராட்டா பருவம் சுரேஷ் பாபு தகுபதி மற்றும் சுதாகர் செருகுரி இணைந்து தயாரிக்கிறது. இப்படம் ஏப்ரல் 30 ஆம் தேதி, திரையில் வெளியாக உள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X