Sai Pallavi: எது! சாய் பல்லவிக்கு திருமணமா..? மாலையும் கழுத்துமாக ட்ரெண்டான போட்டோ... உண்மை இதுதானா?

சென்னை: முன்னணி நடிகையான சாய் பல்லவி, தமிழ், தெலுங்கு, மலையாள படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். தற்போது எஸ்கே 21 படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடித்து வருகிறார் சாய் பல்லவி.

இதனைத் தொடர்ந்து விரைவில் இந்தியிலும் லவ் டுடே படம் மூலம் அவர் அறிமுகமாகவுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில், சாய் பல்லவிக்கு திருமணம் நடந்துவிட்டதாக வைரலான போட்டோவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

 Sai Pallavi: Sai Pallavis fake wedding photo trending on social media

சாய் பல்லவிக்கு திருமணமா: விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்கள் மூலம் பிரபலமானவர் சாய் பல்லவி. முதன்முறையாக மலையாளத்தில் வெளியான பிரேமம் திரைப்படத்தில் நடிகையாக அறிமுகமானார். மலர் டீச்சர் கேரக்டரில் நடித்து ரசிகர்களை வசீகரித்த சாய் பல்லவி, தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளிலும் பிஸியாக நடிக்கத் தொடங்கினார். தனுஷுடன் மாரி, சூர்யாவுடன் NGK என டாப் ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்தார்.

அதேபோல், தெலுங்கில் நானி, நாக சைதன்யா, மலையாளத்தில் துல்கர் சல்மான், ஃபஹத் பாசில் போன்ற முன்னணி ஹீரோக்களுக்கும் ஜோடியாக நடித்துள்ளார். இதனையடுத்து தற்போது சிவகார்த்திகேயனின் SK 21 படத்தில் நாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் படப்பிடிப்புக்காக காஷ்மீர் சென்றிருந்த சாய் பல்லவி, அடுத்த ஷெட்யூலுக்காகவும் ரெடியாகிவிட்டாராம்.

இதனிடையே, கோலிவுட், டோலிவுட்டைத் தொடர்ந்து பாலிவுட்டிலும் என்ட்ரியாகவுள்ளாராம் சாய் பல்லவி. தமிழில் சூப்பர் ஹிட்டான லவ் டுடே படத்தின் இந்தி ரீமேக்கில், அமீர்கான் மகன் ஜுனைத்கானுக்கு ஜோடியாக நடிக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது. விரைவில் இதுபற்றிய அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், தற்போது வெளியான ஒரு போட்டோ, கோலிவுட்டையே பரபரப்பாக்கிவிட்டது.

 Sai Pallavi: Sai Pallavis fake wedding photo trending on social media

அதாவது சாய் பல்லவி இளைஞர் ஒருவருடன் மாலையும் கழுத்துமாக ஜோடியாக இருக்கும் போட்டோ தான் அது. மேலும், "இறுதியாக சாய் பல்லவி தனது காதலனை கரம் பிடித்தார். காதலுக்கு நிறம் முக்கியம் இல்லை என்பதை சாய் பல்லவி நிரூபித்துவிட்டார்" என கேப்ஷன் கொடுக்கப்பட்டிருந்தது. இந்த போட்டோவை உண்மை என நம்பிய ரசிகர்கள், சாய் பல்லவிக்கு திருமணம் ஆகிவிட்டதா என அதிர்ச்சியில் உறைந்தனர்.

ஆனால், இந்த போட்டோ உண்மைதான் என்றும், இது சாய் பல்லவியின் திருமண புகைப்படம் இல்லையென்பதும் தெரியவந்துள்ளது. சிவகார்த்திகேயனின் எஸ்கே 21 படத்தின் பூஜை விழாவில் எடுக்கப்பட்ட போட்டோவான இதில், சாய் பல்லவிக்கு அருகில் இருப்பது இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி என்பதும் தெரியவந்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட குரூப் போட்டோவில் இருந்து, சாய் பல்லவியையும் ராஜ்குமார் பெரியசாமியையும் மட்டும் எடிட் செய்து இந்த தகவல் வைரலாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X