அது எந்த படம்னு தெரியலையே.. லிப் லாக்கில் இருந்து சாய் பல்லவியை காப்பாற்றிய மீ டு இயக்கம்!

By

சென்னை: லிப் லாக் காட்சியில் இருந்து மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றியதாக நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார்.

நடிகை சாய் பல்லவி, விஜய் டிவியில் ஒளிபரப்பான, யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.

சிறந்த நடன கலைஞரான அவர், தெலுங்கு சேனல் ஒன்றில் தி அல்டிமேட்டு டான்ஸு என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று புகழ்பெற்றார்.

மலர் டீச்சர்

மலர் டீச்சர்

பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானர். இதில் இவர் நடனமும் மலர் டீச்சர் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த அவர், தெலுங்குக்குச் சென்றார்.

தனுஷூடன் மாரி 2

தனுஷூடன் மாரி 2

அங்கு அவர் நடித்த ஃபிடா படம் வரவேற்பைப் பெற்றது. தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து தனுஷூடன் 'மாரி 2' படத்தில் நடித்தார்.

ரவுடி பேபி சாதனை

ரவுடி பேபி சாதனை

யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபுதேவாவின் நடன அமைப்பில், தனுஷூடன் சாய் பல்லவி ஆடிய இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமானது. இதில் அவர்கள் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி, சாதனைப் படைத்துள்ளது.

லிப் லாக் காட்சி

லிப் லாக் காட்சி

இந்நிலையில், அவர் அளித்துள்ள பேட்டியில், லிப் லாக் காட்சியில் இருந்து மீ டூ இயக்கம் தன்னை காப்பாற்றியதாக நடிகை சாய் பல்லவி கூறியுள்ளார். எந்த படம், எந்த இயக்குனர், எந்த இயக்குனர் என எதையும் குறிப்பிடாமல் இதுபற்றி அவர் தெரிவித்திருப்பதாவது: ஒரு படத்தின் ஷூட்டிங்கில் இருந்தேன்.

என்ன செய்வீர்கள்?

என்ன செய்வீர்கள்?

இயக்குனர் என்னை லிப் லாக் காட்சியில் நடிக்கும்படி சொன்னார். நான் உடனடியாக மறுத்துவிட்டேன். பின்னர் இயக்குனர் மீண்டும் அந்தக் காட்சியில் நடிக்கச் சொன்னார். அப்போது அந்தப் படத்தின் ஹீரோ, அவர் உங்களை இந்த விஷயத்துக்காக மீ டூ கிளப்பில் சேர்த்தால் என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்.

Recommended Video

Sai Pallavi to play late actor Soundarya Biopic
காப்பாற்றி இருக்கிறது

காப்பாற்றி இருக்கிறது

அதற்கு பிறகு அந்த இயக்குனர் முத்தக் காட்சி பற்றி கேட்கவில்லை. அந்த வகையில் மீ டு இயக்கம் என்னை லிப் லாக் காட்சியில் இருந்து காப்பாற்றி இருக்கிறது எனக் கூறியுள்ளார் நடிகை சாய் பல்லவி. அதோடு பெண்கள் உடல் நிறங்களில் அதிக கவனம் செலுத்த தேவையில்லை என்றும், அது நம்பிக்கையை பாதித்துவிடக் கூடாது என்றும் தெரிவித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X