லிப் டூ லிப் முத்தமா?: விஜய் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி
ஹைதராபாத்: விஜய் தேவரகொண்டாவின் டியர் காம்ரேட் படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை ஏற்க மறுத்தாராம் சாய் பல்லவி.
விஜய் தேவரகொண்டா, ரஷ்மிகா மந்தனா நடித்துள்ள டியர் காம்ரேட் தெலுங்கு படம் வரும் 26ம் தேதி வெளியாக உள்ளது. விஜய் மற்றும் ரஷ்மிகா அந்த படத்தின் விளம்பர நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகின்றனர்.

டியர் காம்ரேட் ட்ரெய்லரில் விஜய் மற்றும் ரஷ்மிகா லிப் டூ லிப் முத்தம் கொடுத்திருந்தனர். அந்த காட்சியை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். சிலரோ ரஷ்மிகாவை மட்டும் குறை கூறி திட்டினார்கள். விஜய்யுடன் இப்படி லிப் டூ லிப் முத்தம் கொடுத்து நடிக்கத் தான் திருமணத்தை நிறுத்தினீர்களா என்று ரஷ்மிகாவை கன்னட ரசிகர்கள் விளாசினார்கள்.
டியர் காம்ரேட் படத்தில் விஜய் ஜோடியாக நடிக்க முதலில் சாய் பல்லவியை தான் அணுகினார்களாம். ஆனால் படத்தில் லிப் டூ லிப் முத்தக் காட்சி இருப்பது குறித்து அறிந்த சாய் பல்லவி சாரி, என்னால் அது போன்ற காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது என்று தெரிவித்தாராம். அதன் பிறகே அந்த வாய்ப்பு ரஷ்மிகா மந்தனாவுக்கு சென்றுள்ளது.
ரஷ்மிகா ஏற்கனவே விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீத கோவிந்தம் படத்திலும் லிப் டூ லிப் முத்தக் காட்சியில் நடித்திருந்தார். அதனால் மீண்டும் அதே போன்ற காட்சியில் நடிக்க அவர் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.
டியர் காம்ரேட் ட்ரெய்லர் வெளியானதில் இருந்து அந்த முத்தக் காட்சி குறித்து தான் பேசப்பட்டது. இந்நிலையில் இது குறித்து விஜய் தேவரகொண்டாவிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர் கூறியதாவது,
அது லிப் லாக் இல்லை, முத்தம் மட்டுமே. கோபம் போன்று அதுவும் ஒரு உணர்ச்சி. அது என்ன லிப் லாக், எனக்கு அந்த வார்த்தையே பிடிக்கவில்லை. எப்பொழுது லிப் லாக் என்று படித்தாலும் what the f**k என்று தோன்றுகிறது. எனக்கு அது பிடிக்கவில்லை என்றார்.
முத்தக் காட்சியில் நடித்துவிட்டு அது பற்றி கேள்வி கேட்டால் மட்டும் விஜய் தேவரகொண்டா கோபப்படுகிறாரே என்று விமர்சனம் எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











