ஸ்லீவ்லெஸ் போட்டு நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவேயில்லை.. சாய் பல்லவி பேச்சால் அனிமல் இயக்குநர் ஷாக்
சென்னை: சாய் பல்லவி தான் தென்னிந்திய சினிமாவில் தற்போது மோஸ்ட் வான்டட் நடிகைகளில் ஒருவராக உள்ளார். இவரது நடிப்பில் கடைசியாக வெளியான அமரன் படம் விமர்சன ரீதியாக பெரும் வெற்றிப் படமாக மாறியது. இப்படியான நிலையில், அவரது நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் தண்டேல். நாக சைதன்யா நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படம் வரும் 7ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. படத்தின் புரோமோசன் நிகழ்ச்சியில் சாய் பல்லவி பேசியது பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
பிரபல தெலுங்கு சினிமா இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்கத்தில் உருவாகி நாளை மறுநாள் ரிலீஸ் ஆக உள்ள படம் தண்டேல். இந்தப் படம் உண்மைச் சம்பவத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ளது. மேலும், படத்திற்கு அதிக பொருட் செலவு செய்யப்பட்டுள்ளது. நாக சைதன்யா நடிப்பில் அதிக பொருட்செலவில் உருவாக்கப்பட்ட படம் இதுதான். படத்தின் மீது ரசிகர்களுக்கு தனி நம்பிக்கை ஏற்பட முக்கிய காரணங்களில் ஒன்றாக சாய் பல்லவி உள்ளார். அமரன் படத்திற்காக அவருக்கு தேசிய விருது கிடைத்தாலும் கிடைக்கும் என கூறப்படுகிறது.

தண்டல் படத்தினை கீதா ஆர்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து, அல்லு அரவிந்த், மற்றும் பன்னி தாஸ் ஆகியோர் தயாரித்துள்ளனர். தேவி ஸ்ரீ பிரசாத் இந்தப் படத்திற்கு இசை அமைத்துள்ளார். படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ரிலீஸ் ஆகவுள்ளது. சில தினங்களுக்கு முன்னர் தண்டல் படத்தின் ப்ரீ - ரிலீஸ் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குநர் சந்தீப் ரெட்டி பேசியது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

சந்தீப் ரெட்டி: சந்தீப் ரெட்டி இயக்கத்தில் அர்ஜுன் ரெட்டி மற்றும் அனிமல் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இவர் பேசும்போது, தான் அர்ஜுன் ரெட்டி கதையை எழுதும்போது சாய் பல்லவியை தான் முதலில் நடிக்க வைக்க திட்டமிட்டேன். ஆனால் அவரது மேனேஜரைத் தொடர்புகொண்டபோது, ' சாய் பல்லவி ஸ்லீவ்லெஸ் கூட போட்டு நடிக்க மட்டார் எனக் கூறினார். அதன் பின்னர் சாய் பல்லவியை நடிக்க வைக்கும் முயற்சியை நான் கைவிட்டுவிட்டேன் எனப் பேசினார். இவரது இந்தப் பேச்சு பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.

சாய் பல்லவி ரிப்ளை: இதையடுத்து பேசிய சாய் பல்லவி, " எனக்கு மேனேஜர் என யாருமே இல்லை. என் மேனேஜர் எனக் கூறி உங்களை யாரோ ஏமாற்றியுள்ளார்கள். உங்களை ஏமாற்றியது யார் எனத் தெரியவில்லை. ஆனால் அர்ஜுன் ரெட்டி படத்தில் ஷாலினி பாண்டே மற்றும் விஜய் தேவரகொண்டா இருவருமே சிறப்பாக நடித்தார்கள். அர்ஜுன் ரெட்டி கொடுத்த வெற்றியின் மூலம் பாலிவுட்டுக்கு போயுள்ளீர்கள். உங்கள் அடுத்த படைப்புக்காக ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டு உள்ளார்கள்" என பேசினார்.

ஷாக்: சாய் பல்லவியின் இந்தப் பேச்சு ரசிகர்களை மேலும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அதாவது, சாய் பல்லவிக்கு மேனேஜர் கூட கிடையாதா? என்ற கேள்வியை பலரும் முன் வைத்து வருகின்றனர். மேலும் சாய் பல்லவியின் மேனேஜர் என நம்பி, சந்தீப் ரெட்டி யாரிடம் பேசினார் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். தண்டல் படம் சாய் பல்லவியின் திரை வாழ்க்கையில் முக்கியமான படமாக இருக்கும் என கூறப்படுகிறது.



Click it and Unblock the Notifications











