சூர்யா-ஜோதிகாவைப் பார்த்து எனக்கு பேச்சே வரவில்லை..சாய் பல்லவி நெகிழ்ச்சி

சென்னை: கார்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகை சாய் பல்லவி, "நான் ரொம்ப மன்னிப்பு கேட்கிறேன்" என சொல்லிவிட்டு நடிகர் சூர்யா பற்றி பேசியது டிரெண்டாகி வருகிறது.

சாய் பல்லவி நடிப்பில் தொடர்ந்து ஏகப்பட்ட படங்கள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் வெளியான விராட பருவம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அடுத்ததாக அவர் நடிப்பில் உருவாகி உள்ள கார்கி திரைப்படம் விரைவில் வெளியாக போகிறது.

இந்நிலையில், பிரஸ் மீட்டில் சூர்யா பற்றி அவர் நெகிழ்ந்து பேசியிருப்பது சூர்யா ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

சூர்யாவுக்கு ஜோடியாக

சூர்யாவுக்கு ஜோடியாக

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடித்ஹ என்ஜிகே படத்தில் அவருக்கு ஜோடியாக சாய் பல்லவி மற்றும் ரகுல் ப்ரீத் சிங் நடித்திருந்தனர். சாய் பல்லவிக்கும் சூர்யாவுக்கும் இடையே கெமிஸ்ட்ரி அந்த படத்தில் பக்காவாக செட் ஆகி இருந்தது. இந்நிலையில், தனது புதிய படமான கார்கி படத்திற்கு சூர்யா பண்ண விஷயத்தை வியந்து பேசி இருக்கிறார் சாய் பல்லவி.

சாய் பல்லவியின் கார்கி

சாய் பல்லவியின் கார்கி

வரும் ஜூலை 15ம் தேதி சாய் பல்லவி லீடு ரோலில் நடித்துள்ள கார்கி படம் வெளியாகிறது. கமர்ஷியல் படங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், ஷியாம் சிங்கா ராய், விராட பருவம் மற்றும் கார்கி உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார் நடிகை சாய் பல்லவி. இயக்குநர் கெளதம் ராமசந்திரன் இயக்கத்தில் நீதிப் போராட்ட கதையாக இந்த கார்கி உருவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மன்னிப்பு கேட்ட சாய் பல்லவி

மன்னிப்பு கேட்ட சாய் பல்லவி

கார்கி படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகை சாய் பல்லவி தனது பேச்சை முடித்து விட்டு சென்ற நிலையில், திரும்பி வந்து, "நான் ரொம்ப மன்னிப்பு கேட்கிறேன்.. சூர்யா பற்றி பேசாமல் போய்விட்டேன். இந்த படத்திற்கு சூர்யா மிகப்பெரிய பங்களிப்பை அளித்துள்ளார். ஒரு நாள் ஒரு சின்ன பிரஸ்மீட் வாங்கன்னு ஒரு இடத்துக்கு என்னை கூட்டிட்டுப் போனாங்க, ஆனால், அது சூர்யாவின் வீடு என்று எனக்கு தெரியவில்லை, ஜோதிகா பின்னால் இருந்து வந்து சர்ப்ரைஸ் கொடுத்தார்.

Recommended Video

Epic battle between destiny and love Madhan Karky speech |Radhe Shyam Pressmeet
ஷாக் ஆகிட்டேன்

ஷாக் ஆகிட்டேன்

அவங்களை பார்த்ததும் ஷாக் ஆகிட்டேன். அவங்களுக்கு ஒழுங்கா நன்றி கூட நான் சொல்லல.. ரொம்பவே ஷாக் ஆகி நின்னேன். போட்டோக்களில் கூட சிரிச்சேனான்னு கூட தெரியல, ஜெய்பீம், சூரரைப் போற்று போன்ற படங்களில் சூர்யா நடித்து வரும் நிலையில், கார்கி போன்ற வித்தியாசமான படங்களுக்கு அவர் அளித்து வரும் பங்களிப்பு மிகப்பெரியது என சாய் பல்லவி புகழ்ந்து பேசியது சூர்யா ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தி உள்ளது.

கார்கி டிரைலர் ரிலீஸ்

சூர்யா மற்றும் ஜோதிகாவின் 2டி நிறுவனம் சார்பில் வெளியாக உள்ள சாய் பல்லவியின் கார்கி டிரைலர் தற்போது வெளியாகி உள்ளது. தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு மூன்று மொழிகளிலுமே சாய் பல்லவியே டப்பிங் பேசியுள்ளார். செக்யூரிட்டியாக பணியாற்றி வரும் தனது அப்பாவை பொய் வழக்கில் போலீஸ் அழைத்துச் செல்ல தனி ஒரு மனுஷியாக எப்படி போராடி மீட்கிறார் என்பது தான் கார்கி படத்தின் கதை என்பது டிரைலரை பார்த்தாலே புரிகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X