என்னடா நடக்குது இங்க.. நாக சைதன்யாவுக்கு காதலர் தின வாழ்த்து சொன்ன சாய் பல்லவி.. வீடியோ வேற!
ஹைதராபாத்: காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய் பல்லவி வெளியிட்ட வீடியோவில் நாக சைதன்யா அவருடன் ரொமான்ஸ் செய்யும் காட்சிகள் தற்போது இணையத்தில் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
நடிகை சமந்தா மற்றும் நாக சைதன்யா காதலித்து திருமணம் செய்துக் கொண்ட நிலையில், கடந்த 2021ம் ஆண்டு இருவரும் ஒருவரை ஒருவர் பிரிவதாக அறிவித்தது ரசிகர்களை மட்டுமின்றி சினிமா உலகத்தினரையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்நிலையில், இந்த காதலர் தினத்தை முன்னிட்டு சாய் பல்லவி தனது சோஷியல் மீடியா பக்கத்தில் இப்படியொரு வீடியோ வெளியிட்டு இருப்பது பல கேள்விகளை எழுப்பி வருகிறது.
காதல் திருமணம் டு விவாகரத்து: கவுதம் மேனன் இயக்கத்தில் வெளியான விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் சிம்பு மற்றும் திரிஷா நடித்திருந்தனர். அந்தப் படத்திலேயே சமந்தா மற்றும் நாக சைதன்யா கேமியோ ரோலில் நடித்திருப்பார்கள். அதைப்போல தெலுங்கில் வெளியான அந்த படத்தில் சமந்தா மற்றும் நாக சைதன்யா இருவரும் தான் ஹீரோ, ஹீரோயின் என்பது குறிப்பிடத்தக்கது .
முதல் படத்தில் ஏற்பட்ட நட்பு பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக காதலாக மலர்ந்து, எனக்கு 2017 ஆம் ஆண்டு இருவரும் பிரம்மாண்டமாக திருமணம் செய்து கொண்டனர். தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் நாகார்ஜுனாவின் மகன் நாக சைதன்யா என்பதால் திருமணம் எப்படி நடந்திருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. அப்படி காதலித்து திருமணம் செய்து கொண்ட இருவரும், கடந்த 2021 ஆம் ஆண்டு மனக்கசப்பு ஏற்பட்டு ஒருவரை ஒருவர் பிரிய போவதாக அறிவித்தனர்.
இரண்டாம் திருமணம்: நாக சைதன்யா பொன்னியின் செல்வன் படத்தில் வானதியாக நடித்த நடிகை சோபிதா துலிபை காதலித்த வருவதாகவும் அவருடன் டேட்டிங் சென்றதாகவும் புகைப்படங்களை வெளியிட்டு பல கிசுகிசுக்கள் கிளம்பின. அதே போல நடிகை சமந்தா வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளத்தான் நாக சைதன்யாவை பிரிந்தார் என்றும் கூறப்பட்டது. மூன்று ஆண்டுகள் ஆகியும் இருவரும் இரண்டாம் திருமணமே செய்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பல்லவி வெளியிட்ட வீடியோ: இந்நிலையில் காதலர் தினத்தை முன்னிட்டு நடிகை சாய் பல்லவி நடிகர் நாக சைதன்யாவுடன் வெளியிட்ட வீடியோ ஒன்று இணையத்தில் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இருவரும் இணைந்து ஏற்கனவே சமந்தாவை நாக சைதன்யா பிரிந்த அதே 2021ல் வெளியான லவ் ஸ்டோரி படத்தில் நடித்திருந்தனர். இந்நிலையில், தண்டேல் (Thandel) எனும் படத்தில் நடித்து வரும் நிலையில், அந்த படத்திற்கான புரமோஷனாக இப்படியொரு வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
ஒருவேளை இருக்குமோ: சாய் பல்லவி தங்கை பூஜா கண்ணன் சமீபத்தில் நிச்சயம் செய்துக் கொண்டார். ஆனால், அக்கா சாய் பல்லவி இன்னமும் திருமணம் செய்துக் கொள்ளவில்லை. இந்நிலையில், காதலர் தினத்தை முன்னிட்டு படத்தின் புரமோஷன் போல நாக சைதன்யாவுடனான தனது காதலை வெளிப்படுத்தியிருக்கிறாரா சாய் பல்லவி? என்றும் ரசிகர்கள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர். சிவகார்த்திகேயன் உடன் நடித்துள்ள எஸ்கே 21 படத்தின் புரமோஷன் எதையும் வெளியிடாமல் நாக சைதன்யா படத்துக்கு மட்டும் ஏன் இப்படியொரு புரமோஷன் என்றும் கேட்டு வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











