வீடியோ வெளியிட்டு விளக்கம்.. தினமும் நம்ம 'ரவுடி பேபி' புன்னகையோடு எழுவதற்கு இதுதான் காரணமாம்!
சென்னை: தினமும் காலையில் புன்னகையுடன் எழுவதற்கு இதுதான் காரணம் என்று ரவுடி பேபி நடிகை வீடியோ வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
பிரபல தமிழ் நடிகை சாய் பல்லவி. விஜய் டிவியில் ஒளிபரப்பான, யார் அடுத்த பிரபுதேவா என்ற நடன நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் பிரபலமானார்.
சிறந்த நடன கலைஞரான அவர், தெலுங்கு சேனல் ஒன்றில் தி அல்டிமேட்டு டான்ஸு என்ற நிகழ்ச்சியிலும் பங்கேற்று புகழ்பெற்றார்.

மலர் டீச்சர் கேரக்டர்
பின்னர், பிரேமம் என்ற மலையாள படம் மூலம் நடிகையாக அறிமுகமானர். இதில் இவர் நடனமும் மலர் டீச்சர் கேரக்டரும் ரசிகர்களை கவர்ந்தது. இந்த படம் சூப்பர் ஹிட் ஆனதை அடுத்து, தமிழ் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகளில் பிரபலமானார். தொடர்ந்து மலையாள படங்களில் நடித்த அவர், பின்னர் தெலுங்குக்குச் சென்றார். அங்கு அவர் நடித்த ஃபிடா படம் வரவேற்பைப் பெற்றது.

தனுஷூடன் மாரி 2
இந்தப் படத்தில் 'ஒச்சிந்தே' என்ற பாடலில் அவரது நடனம் ரசிகர்களை அதிகம் கவர்ந்தது. தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகள் குவிந்தன. இந்நிலையில் ஏ.எல்.விஜய் இயக்கிய தியா என்ற படம் மூலம் தமிழுக்கு வந்தார். தமிழ், தெலுங்கில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறவில்லை. அடுத்து தனுஷூடன் 'மாரி 2' படத்தில் நடித்தார். இந்தப் படத்தை பாலாஜி மோகன் இயக்கி இருந்தார்.

ரவுடி பேபி சாதனை
யுவன் சங்கர் ராஜா இசை அமைப்பில் இந்தப் படத்தில் இடம்பெற்ற 'ரவுடி பேபி' பாடல் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. பிரபுதேவாவின் நடன அமைப்பில், தனுஷூடன் சாய் பல்லவி ஆடிய இந்தப் பாடல் உலக அளவில் பிரபலமானது. இதில் அவர்கள் நடனம் சிறப்பாக அமைந்திருந்தது. யுடியூப்பில் அதிகமானோர் பார்த்த பாடலாகவும் ரவுடி பேபி, சாதனைப் படைத்துள்ளது.

புன்னகையுடன்
இந்நிலையில், நடிகை சாய்பல்லவி தனது இன்ஸ்டாகிராமில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். வானத்தின் அழகை காட்டும் அந்த வீடியோவின் இறுதியில் வானவில் தெரிகிறது. அதில், நான் புன்னகையுடன் காலையில் எழுவதற்கு காரணம், இந்த பூமி, சில ஆச்சர்யங்களைத் தருவதுதான் என்று கூறியுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலர் அவரை பாராட்டியுள்ளனர்.


Click it and Unblock the Notifications











