Sai Pallavi: வெட்டிபசங்க வேலை.. ஓரளவுக்குத்தான் பொறுமையா இருப்பேன்.. சவுக்கெடுத்த சாய் பல்லவி!
சென்னை: நடிகை த்ரிஷாவை தொடர்ந்து நடிகை சாய் பல்லவியும் திருமண வதந்திக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளது பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கமல் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடித்து வருகிறார் சாய் பல்லவி.

அடுத்ததாக நாக சைதன்யாவுக்கு ஜோடியாக புதிய படமொன்றில் சமீபத்தில் கமிட் ஆகியிருந்தார். இந்நிலையில், இயக்குநர் ஒருவருடன் ரகசிய திருமணம் செய்து கொண்டார் சாய் பல்லவி என கிராப் செய்யப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு தேவையற்ற வதந்திகளை சோஷியல் மீடியாவில் பரப்பிய நிலையில், அதற்கு பதிலடி கொடுத்துள்ளார்.
போல்டான நடிகைகள்: முன்பை போல கிசுகிசு எல்லாம் வந்தால், பயந்து கொண்டு அமைதியாக எல்லாம் இருக்க முடியாது என்பதை சமீப காலமாக சமந்தா, த்ரிஷா, சாய் பல்லவி என வரிசையாக ட்வீட்களை போட்டு நடிகைகள் தெறிக்கவிட்டு வருகின்றனர். சமீப காலமாக சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வரும் நடிகைகளுக்கு எப்படியாவது கல்யாணம் பண்ணி வைத்தே தீர வேண்டும் என்றும் கல்யாணம் ஆன ஜோடிகளுக்கு விவாகரத்து செய்து விட வேண்டும் என ஒரு க்ரூப்பே அலைவதாக கூறுகின்றனர்.

நடிகர்களின் போட்டியாளர்களின் ஐடி விங்கே இந்த வேலையை பார்த்து வருவதாகவும், இதுபோன்ற விஷமங்களை செய்பவர்களுக்கு பிசினஸ் ரீதியான உள்நோக்கம் இருப்பதாகவும் நடிகைகளே விளாசி வருகின்றனர்.
விளாசிய த்ரிஷா: த்ரிஷாவுக்கும் மலையாள தயாரிப்பாளருக்கும் திருமணம் என வதந்தி பரவிய நிலையில், நானே இப்போதான் பொன்னியின் செல்வன், லியோ, விடாமுயற்சி என அடுத்தடுத்து பெரிய படங்களில் நடித்து வருகிறேன். அதற்குள் அதற்கு வேட்டு வைக்க ஏன் டா நினைக்கிறீங்க என வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நேற்று ஒரு ட்வீட் போட்டு பொறி கிளப்பி இருந்தார்.

சவுக்கெடுத்த சாய் பல்லவி: இந்நிலையில், நடிகை சாய் பல்லவி தற்போது தன்னையும் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமியையும் இணைத்து பரப்பப்பட்டு வந்த வதந்திக்கு சரவெடியாக முடிவு கட்டியிருக்கிறார்.
தன்னை பற்றிய வதந்திகள் வந்தால் கூட பொறுத்துக் கொள்வேன். ஆனால், தன்னுடைய நண்பர்களையும், குடும்பமாக இருக்கும் உறவுகளையும் கொச்சைப்படுத்தும் விதமாக யாராவது வேலை வெட்டி இல்லாத வெட்டி பசங்க படத்தின் பூஜையின் போது எடுத்த போட்டோக்களை கிராப் செய்து போட்டு ஆதாயம் தேட பார்த்தால் அவ்வளவு தான் என எச்சரித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











