சாய்பல்லவியின் கார்கி படத்திற்கு சர்வதேச அளவில் கிடைத்த சிறப்பான அங்கீகாரம்: படக்குழு உற்சாகம்
மாஸ்கோ: சாய் பல்லவி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'கார்கி' திரைப்படத்திற்கு சிறப்பான வரவேற்பு கிடைத்தது.
திரையரங்குகளைத் தொடர்ந்து சோனியில் வெளியான 'கார்கி' ஓடிடி ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
இந்நிலையில், இந்தப் படத்திற்கு சர்வதே அளவில் சிறப்பான அங்கீகாரம் கிடைத்துள்ளது.

வரவேற்பை பெற்ற கார்கி
கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் சாய் பல்லவி முதன்மை பாத்திரத்தில் நடித்திருந்த படம் 'கார்கி.' இந்தப் படத்தில் காளி வெங்கட், கவிதாலயா கிருஷ்ணன், லிவிங்ஸ்ட, சரவணன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர், கோவிந்த் வசந்தா இசையமைத்திருந்தார். இந்தப் படத்தை தமிழில் சூர்யாவின் 2டி நிறுவனம் வெளியிட்டது. ஜூலை 15ம் தேதி திரையரங்குகளில் வெளியான இந்தப் படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் கிடைத்தன. அதனால் படமும் சிறப்பான வரவேற்பை பெற்றது.

ஓடிடியில் ஹிட் அடிக்கும் கார்கி
சாய் பல்லவிக்கும் அவரது தந்தைக்கும் இடையேயான உறவுப் பின்னணியில், உளவியல் ரீதியான கதைக்களத்தை அமைத்து, அதில் சமூகத்திற்கும் மெசேஜ் சொல்லியிருந்தது 'கார்கி.' சாய் பல்லவியின் கேரியரில் முக்கியமான படமாக அமைந்த கார்கி, திரையரங்குகளைத் தொடர்ந்து சோனியில் வெளியானது. ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி நல்ல வரவேற்பு கிடைத்ததால், ஓடிடி ரசிகர்களிடம் கார்கி படத்திற்கு தரமான ரீச் கிடைத்துள்ளது.

44வது மாஸ்கோ திரைப்பட விழா
'கார்கி' வெளியானதில் இருந்தே இந்தப் படத்திற்கு ஏராளமான விருதுகள் கிடைக்கும் என சொல்லப்பட்டது. இந்நிலையில், இத்திரைப்படம் சர்வதேச அளாவில் மிகப் பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. ரஷ்யாவில் நடைபெறும் 44வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிட தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக Blockbusters From Around The World என்ற பிரிவில் திரையிடப்படுகிறது. இந்த அறிவிப்பு கார்கி படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

புஷ்பாவுக்கும் மாஸ்கோவில் அங்கீகாரம்
'கார்கி' படம் மாஸ்கோ திரைப்பட விழாவில் திரையிடப்படவுள்ளதை, சாய் பல்லவி உள்ளிட்ட படக்குழுவினர் கொண்டாடி வருகின்றனர். இந்த திரையிடலுக்குப் பின்னால், 'கார்கி' படம் சர்வதேச அளவில் கவனம் பெரும் என நம்பிக்கைத் தெரிவித்துள்ளனர். இதனிடையே கார்கி படத்தைப் போல, அல்லு அர்ஜுனின் 'புஷ்பா' திரைப்படமும் 44வது மாஸ்கோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்படுவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











