ரவுடி பேபின்னா சும்மாவா.. அப்பவே அந்தாட்டம் போட்டிருக்காரே சாய் பல்லவி.. காலேஜ் வீடியோவை பாருங்க!

சென்னை: நடிகை சாய் பல்லவி கல்லூரி விழா ஒன்றில் மேடையேறி நடனமாடிய த்ரோபேக் வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. 31 வயதாகும் சாய் பல்லவி தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி மொழிகள் என பான் இந்தியா நடிகையாக தற்போது வலம் வருகிறார்.

கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த சாய் பல்லவி அந்த படத்தின் ரிலீஸுக்காக காத்திருக்கிறார். அடுத்ததாக அனிமல் படத்தை முடித்த நிலையில் பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் ராமாயணம் படத்தில் நடிக்க உள்ளார். சீதையாக நடிக்க தேவையான பயிற்சிகளை அவர் தற்போது மேற்கொண்டு வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Sai Pallavi throwback college stage dance video goes trending now

உங்களில் யார் அடுத்த பிரபுதேவா நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்டு டான்ஸ் ஆடிய சாய் பல்லவி சமந்தா தொகுத்து வழங்கிய தெலுங்கு ரியாலிட்டி ஷோவில் நடனம் ஆடியுள்ளார்.

பிரேமம் படத்திலேயே பிடித்துப் போய்விட்டது: "மலரே நின்னை காணாதிருந்தால்" என நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளியான மலையாள திரைப்படமான பிரேமம் படத்தைப் பார்த்ததிலிருந்து ரசிகர்கள் சாய் பல்லவி மீது பயங்கர கிரேஸில் உள்ளனர். அந்த படத்துக்கு முன்னதாக கஸ்தூரி மான், தாம் தூம் உள்ளிட்ட படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்திருந்தார். பிரேம் திரைப்படம் தான் ஹீரோயினாக சாய் பல்லவிக்கு மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த படம் என்பது குறிப்பிடத்தக்கது.

துல்கர் சல்மான் முதல் தனுஷ் வரை: நிவின் பாலி நடிப்பில் வெளியான பிரேமம் படத்தின் வெற்றியால் அடுத்தடுத்து டோலிவுட் மற்றும் கோலிவுட்டில் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு சாய் பல்லவிக்கு கிடைத்தது. பிரேமம் படத்தை தொடர்ந்து மலையாளத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான களி படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் ஃபிடா, மிடில் கிளாஸ் அப்பாயி படங்களில் நடித்த சாய் பல்லவி தமிழில் தியா படத்தின் மூலம் அறிமுகமானார். ஆனால் தனுஷுடன் இணைந்து மாரி 2 படத்தில் அவர் நடித்ததுதான் ஏகப்பட்ட ரசிகர்களை கோலிவுட்டில் அவருக்கு பெற்றுத் தந்தது. அதிலும் அந்த ரவுடி பேபி பாடலுக்கு தனுஷுடன் அவர் இணைந்து போட்ட ஆட்டம் காரணமாக ஒரு பில்லியன் வியூஸை கடந்த முதல் தமிழ் பாடலாக அது மாறியது.

கல்லூரியில் குத்தாட்டம்: பிரேமம் படத்தில் மலர் டீச்சராக சாய்பல்லவி நடித்தாலும் நிவின் பாலி உள்ளிட்ட கல்லூரி மாணவர்களுக்கு அவர் நடனம் சொல்லிக் கொடுக்கும் காட்சி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவுக்கு அவரைப் பிடித்துப் போக செய்தது. பேசிக் ஆகவே நடனக் கலைஞரான சாய் பல்லவி கல்லூரியிலிருந்து நடனத்தின் மீது ஆர்வம் கொண்டிருந்தார் என்பதற்கு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் அவர் நடனமாடிய த்ரோபேக் வீடியோ சாட்சியாக அமைந்துள்ளது. அக்ஷய் குமார் நடித்த 'மார் கான்' படத்தில் இடம்பெற்ற சூப்பர் ஹிட் பாடலான "ஷீலா கி ஜவானி" பாடலுக்கு கல்லூரியில் நடனமாடியுள்ளார். அந்த வீடியோவை தற்போது ரசிகர்கள் அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.

அமரன், ராமாயணம்: கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்த அமரன் திரைப்படம் ரெடி ஆகிவிட்ட நிலையிலும் தேர்தல் காரணமாக அதன் ரிலீஸ் தேதி இன்னமும் அறிவிக்கப்படாமல் உள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் இந்தியன் 2, செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி கோட், அக்டோபர் மாதம் வேட்டையன் உள்ளிட்ட படங்கள் வெளியாகும் என இப்போதே அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அமரன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை ராஜ்கமல் நிறுவனம் இன்னமும் அறிவிக்கவில்லை. அமரன் படத்தை தொடர்ந்து பாலிவுட்டில் பிரம்மாண்டமாக உருவாக உள்ள ராமாயணம் படத்தில் சீதையாக சாய் பல்லவி நடிக்க காத்திருக்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X