தெலுங்கு நடிகருக்கு மீண்டும் ஜோடியாகும் சாய் பல்லவி.. இது சூப்பர் ஹிட் காம்போவாச்சே!

ஹைதராபாத் : நடிகை சாய் பல்லவி இப்பொழுது தெலுங்கில் விராட பருவம், லவ் ஸ்டோரி, ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் சில திரைப்படங்களில் மட்டுமே நடித்துள்ள இவர் கதைகளுக்கு முக்கியத்துவம் தரும் படங்களில் மட்டும் நடிப்பதை வழக்கமாக கொண்டு உள்ளார்.

இந்த நிலையில் பிரபல தெலுங்கு நடிகருடன் ஏற்கனவே இணைந்து நடித்த படம் சூப்பர் ஹிட் ஆனதால் அந்த ஜோடி தற்போது மீண்டும் புதிய திரைப்படத்தில் இணைய உள்ளது தெலுங்கு ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது.

விராட பருவம்

விராட பருவம்

நடிப்பு, நடனம் அளவான கவர்ச்சி என சினிமாவில் கலக்கிக் கொண்டிருக்கும் நடிகை சாய் பல்லவி தெலுங்கு திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்தி வருகிறார். மற்ற நடிகைகள் போல் இல்லாமல் கதைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்து நடித்து வரும் இவருக்கு கைவசம் லவ் ஸ்டோரி, விராட பருவம் மற்றும் ஷ்யாம் சிங்கா ராய் ஆகிய படங்கள் உள்ளன.

பிடா

பிடா

இதில் விராட பருவம் திரையரங்குகளில் வெளியாக தாமதமாவதால் நேரடியாக ஓடிடியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. சாய் பல்லவி நடிக்கும் பெரும்பாலான திரைப்படங்கள் வெற்றி பெற்று வரும் நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சேகர் கம்முலா இயக்கத்தில் பிடா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இதில் இவருக்கு ஜோடியாக இளம் நடிகர் வருண் தேஜ் நடித்திருந்தார்.

டோலிவுட்டே எதிர்பார்ப்பில்

டோலிவுட்டே எதிர்பார்ப்பில்

வழக்கமான காதல் கதை என்றாலும் அனைவருக்கும் பிடித்தது. பெரும் வரவேற்பையும் பெற்று ஹிட்டடித்தது. தெலுங்கு சினிமாவில் வெளியான மிகச்சிறந்த காதல் திரைப்படங்களில் ஒன்றாக பிடா கொண்டாடப்பட்டது . வருண் தேஜ் மற்றும் சாய்பல்லவி முதல்முறையாக இணைந்து நடித்திருந்தாலும் காட்சிக்கு காட்சி அனைவரையும் ரசிக்க வைத்திருப்பதால் இந்த ஜோடி மீண்டும் எப்பொழுது இணைவார்கள் என டோலிவுட்டே பெரும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருந்தது.

Recommended Video

மணிரத்னம் எனக்கு தெரியாமலேயே SHOOT பண்ணுவார் | CLOSE CALL WITH NIROSHA PART-03 | FILMIBEAT TAMIL
கதாநாயகியாக சாய்பல்லவி

கதாநாயகியாக சாய்பல்லவி

இந்த நிலையில் பிடா கூட்டணி மீண்டும் இணைய உள்ளதாக கூறப்படுகிறது. இயக்குனர் வெங்கி குடுமுலா கூறிய கதை வருண் தேஜாவுக்கு மிகவும் பிடித்த விட நடிக்க ஓகே சொல்லிவிட்டாராம். எனவே கதாநாயகியாக நடிக்க சாய்பல்லவி உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. மீண்டும் பிடா கூட்டணி இணைய இருப்பது தெலுங்கு ரசிகர்களிடம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X