Don't Miss!
- Finance ரிலையன்ஸ் ஜியோ மூத்த அதிகாரி திடீர் ராஜினாமா..!!
- Sports ஜடேஜா பேட்டிங் முதல் ருதுராஜ் கேப்டன்சி வரை.. சிஎஸ்கே செய்த தவறுகள்.. தோல்விக்கு காரணமான 3 சம்பவம்!
- News தமிழ்நாடு முழுவதும் மாணவர்களுக்கு இன்று முதல் கோடை விடுமுறை.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது?
- Automobiles ஓலா, ஏத்தர் எல்லாம் ஓரமா போ! ஆம்பியர் நிறுவனத்தின் புதிய இவி 30ம் தேதி வருது!
- Lifestyle குரு பார்வை இருந்தால் திருமணம் நடந்துவிடுமா? ஜோதிடம் சொல்வது என்ன?
- Technology கம்பெனிக்கு கட்டுமா பாஸ்.. ரூ.10,999 போதும்.. 108MP கேமரா.. 8GB ரேம்.. புதிய itel போன் அறிமுகம்.. எந்த மாடல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
உருவாகிறது, விமான விபத்தில் இறந்த பிரபல நடிகையின் பயோபிக்.. நம்ம 'ரவுடி பேபி' நடிக்கிறாராமே?
சென்னை: பிரபல நடிகையின் வாழ்க்கை கதையில் 'ரவுடி பேபி' சாய் பல்லவி நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாற்றுக் கதைகளை படமாக எடுப்பது இப்போது அதிகரித்து வருகிறது.
நடிகை சாவித்ரியின் வாழ்க்கை கதை நடிகையர் திலகம் என்ற பெயரில் வெளியாகி சூப்பர் ஹிட்டானது.
கங்கனா ரனவத்
இதில் நடித்த கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருது கிடைத்தது. இதையடுத்து, இப்போது தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை கதை 'தலைவி' என்ற பெயரில் உருவாகி வருகிறது. இதில் இந்தி நடிகை கங்கனா ரனவத், ஜெயலலிதாவாக நடிக்கிறார். விஜய் இயக்குகிறார். அரவிந்த் சாமி, பூர்ணா, இந்தி நடிகை பாக்யலட்சுமி உள்பட பலர் நடிக்கின்றனர்.
சவுந்தர்யா பயோபிக்
இப்போது நடிகை சவுந்தர்யாவின் வாழ்க்கை கதையை சினிமாவாக எடுக்க இருப்பதாகக் கூறப்படுகிறது. நடிகை, சவுந்தர்யா, கார்த்தி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக மாறிய 'பொன்னுமணி' மூலம் தமிழில் அறிமுகமானவர். ஆர்.வி.உதயகுமார் இயக்கி இருந்த இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்திருந்தார்.
காதலா காதலா
இந்தப் படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து, தொடர்ந்து தமிழில் வாய்ப்புகள் குவிந்தன. தெலுங்கிலும் வாய்ப்புகள் அதிகரித்தன. தமிழில், சத்யராஜின் சேனாதிபதி, ரஜினிகாந்தின் அருணாச்சலம், கமல்ஹாசனின் காதலா காதலா, சிவாஜி, அர்ஜூன் நடித்த மன்னவரு சின்னவரு, ரஜினியின் படையப்பா உட்பட பல ஹிட் படங்களில் நடித்தார்.
விமான விபத்து
இந்தியில் அமிதாப்பச்சனுடன் சூர்யவம்சம் படத்திலும் நடித்துள்ளார். முன்னணி நடிகையாக வலம்வந்த சவுந்தர்யா கடந்த 2004 ம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சிக்காக, பிரசாரம் செய்ய சென்றபோது, விமான விபத்தில் இறந்து போனார். இது திரையுலகில் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
'ரவுடி பேபி' சாய் பல்லவி
இந்நிலையில் இவர் வாழ்க்கை கதை சினிமாவாக இருக்கிறது. நடிகை சவுந்தர்யாவாக நடிக்க, 'ரவுடி பேபி' சாய் பல்லவியிடம் பேசிவருவதாகவும் அவர் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதுபற்றி சமூக வலைதளங்களில் வேகமாக செய்தி பரவி வருகிறது. படத்தை யார் இயக்கப் போகிறார் என்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
-
முடிச்சிடலாமா.. கூலி டைட்டில் டீசரில் ரஜினியின் டயலாக்.. முந்தைய படங்களை போலவே மாஸ் காட்டும் லோகேஷ்!
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
நான் பிச்சை எடுத்தாலும் மக்களுக்கான சேவை தொடர்ந்து செய்வேன்! நடிகர் பாலா உருக்கமான பேட்டி!