தனுஷுக்காக புது வித்தையை கற்ற சாய் பல்லவி
சென்னை: மாரி 2 படத்திற்காக புது வித்தையை கற்றுக் கொண்டுள்ளாராம் சாய் பல்லவி.
பாலாஜி மோகனின் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான மாரி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுத்து வருகிறார்கள். படப்பிடிப்பு தளத்தில் ஹீரோயின் சாய் பல்லவி தனது பிறந்தநாளை கடந்த 9ம் தேதி கொண்டாடினார்.

இந்த படத்தில் சாய் பல்லவி என்னவாக நடிக்கிறார் என்று இத்தனை நாட்களாக தெரியாமல் இருந்தது. இந்நிலையில் அவரின் கதாபாத்திரம் குறித்த விபரம் தெரிய வந்துள்ளது.
சாய் பல்லவி ஆட்டோ டிரைவராக நடிக்கிறாராம். இதற்காக அவர் ஆட்டோ ஓட்ட பயிற்சி எடுத்தாராம். மாரி 2 படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் பிலிம்ஸ் மூலம் தயாரித்து வருகிறார்.
படத்தில் டொவினோ தாமஸ், வரலட்சுமி சரத்குமார், கிருஷ்ணா, ரோபோ சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். மாரி 2 இந்த ஆண்டு இறுதியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











