Ramayan: சீதையாக மாறிய சாய் பல்லவி.. ராவணன் லுக்கில் மிரட்டும் யஷ்.. ராமர் யாருன்னு பாருங்க!
மும்பை: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்ட கையோடு இந்தியின் இன்னொரு ராமாயணம் படத்திற்கும் சீக்கிரமே பூஜை போட்டு ஆரம்பித்து விடுவார்கள் என்றே தெரிகிறது. அமீர்கானை வைத்து தங்கல் படத்தை எடுத்து பாகுபலி படத்தின் வசூலையே முறியடிக்க செய்த நிதேஷ் திவாரி இயக்கத்தில் இந்தியில் பிரம்மாண்டமாக ராமாயணம் திரைப்படம் உருவாக போகிறது.
கடந்த ஆண்டு ஓம் ராவத் இயக்கத்தில் பிரபாஸ், க்ரித்தி சனோன், சைஃப் அலிகான் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் ராமாயண காவியத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டிருந்தது. பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே வெளியான அந்த திரைப்படத்தில் ஏகப்பட்ட குளறுபடிகள் இருந்த நிலையில் படம் படு தோல்வியை சந்தித்தது.

ஜெய் ஹனுமான் 2: அயோத்தியில் ராமர் கோயில் திறக்கப்பட்டுள்ள நிலையில், நாடு முழுவதும் ஜெய் ஸ்ரீராம் கோஷம் முழங்கப்பட்டு வருகிறது. ராமாயணம், ஹனுமான், மகாபாரதம் என இந்து கடவுள்களின் கதைகளை படமாக்க பலர் படையெடுத்து வருகின்றனர். சமீபத்தில் பொங்கலுக்கு வெளியான ஹனுமான் திரைப்படம் மகேஷ் பாபுவின் குண்டூர் காரம் திரைப்படத்தையே பின்னுக்குத் தள்ளி முன்னேறி உள்ளது. அந்த படத்தின் வெற்றியில் ஒரு பகுதியை சுமார் 2.6 கோடி ரூபாயை அயோத்தி ராமர் கோயிலுக்கு நன்கொடையாக படக்குழுவினர் வழங்கினர். இந்நிலையில், அடுத்ததாக ஜெய் ஹனுமான் எனும் தலைப்பில் இரண்டாம் பாகத்தை உருவாக்க உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.
மீண்டும் ராமாயணம்: பிரபாஸ் நடித்த ஆதிபுருஷ் திரைப்படம் ஓடாத நிலையில், மீண்டும் பிரம்மாண்டமாக ராமாயணம் படத்தை உருவாக்க தங்கல் படத்தை இயக்கிய பாலிவுட் இயக்குனர் நித்தேஷ் திவாரி தீவிரம் காட்டி வருகிறார். அந்த படத்தில் ராமராக ரன்பீர் கபூர், சீதையாக சாய் பல்லவி மற்றும் இராவணனாக யஷ் நடித்த உள்ளதாகவும் விரைவில் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு ஒரு 2025-ஆம் ஆண்டு படத்தின் முதல் பாகம் வெளியாகும் என்றும் மொத்தம் மூன்று பாகங்களாக இந்த படம் உருவாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.
சீதை முதல் ராவணன் வரை: ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் ராமராக ரன்பீர் கபூ,ர், சீதையாக சாய் பல்லவி மற்றும் ராவணனாக யஷ் எப்படி இருப்பார்கள் என்கிற கற்பனையான தோற்றம் தற்போது வெளியாகி இந்திய அளவில் டிரெண்டாகி வருகிறது.

டிரெண்டிங்கில் சாய் பல்லவி: ஆலியா பட் சீதையாக நடிக்காத நிலையில், சாய் பல்லவிக்கு அந்த ஜாக்பாட் அடித்திருப்பதாக கூறுகின்றனர். சாய் பல்லவி சீதையாக செம பொருத்தமாக இருக்கும் புகைப்படம் டிரெண்டாகி வரும் நிலையில், #SaiPallavi ஹாஷ்டேக்கை ரசிகர்கள் டிரெண்ட் செய்து வருகின்றனர். மேலும், சமீபத்தில் தனது தங்கை பூஜா கண்ணன் நிச்சயதார்த்தத்தில் சாய் பல்லவி நடனமாடிய வீடியோவையும் ஷேர் செய்து வருகின்றனர்.
சிவகார்த்திகேயன் படத்தில்: நடிகை சாய் பல்லவி கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள எஸ்கே 21 படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். விரைவில் அந்த படம் வெளியாக காத்திருக்கிறது. சமீபத்தில், அந்த படத்தின் டீசரை பார்த்து மிரண்டு போய் விட்டேன் என இயக்குநர் நெல்சன் திலீப்குமார் போட்ட ட்வீட் ரசிகர்களை அந்த படத்தை பார்க்க வேண்டும் என தூண்டி வருகிறது. இந்நிலையில், பாலிவுட்டிலும் பிரம்மாண்டமாக என்ட்ரி கொடுக்க காத்திருக்கிறார் சாய் பல்லவி.


Click it and Unblock the Notifications











