ரஜினி - கமல் இணையும் தலைவர் 173.. இயக்குநரே இன்னும் முடிவாகல.. ஹீரோயினாக சாய் பல்லவியை ஃபிக்ஸ் செஞ்சாச்சா?
சென்னை: ரஜினிகாந்த்தை வைத்து கமல்ஹாசன் தயாரிக்கும் படத்துக்கு தற்காலிகமாக தலைவர் 173 என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. முதலில் அந்தப் படத்தை சுந்தர்.சி இயக்குவதாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் அவர் படத்திலிருந்து வெளியேற; அடுத்ததாக யார் இயக்குவார் என்று தெரியாமல் இருக்கிறது. இயக்குநரே இன்னும் முடிவு ஆகாத சூழ்நிலையில் படத்தின் ஹீரோயின் பற்றிய புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது.
இந்திய சினிமாவின் தூண்களாக விளங்குபவர்கள் ரஜினிகாந்த்தும், கமல்ஹாசன். இரண்டு பேரும் தங்களது கரியரின் ஆரம்பத்தில் பல படங்களில் சேர்ந்து நடித்தார்கள். ஆனால் நாம் இரண்டு பேரும் சேர்ந்து நடித்துக்கொண்டே இருந்தால் இரண்டு பேரின் வியாபாரமும் பெரிதாகாது; நாமும் பெரிய ஆளாக மாறமாட்டோம் என கமல்ஹாசன் சொன்னதை அடுத்து; அவர்கள் தனித்தனி பாதையில் பயணிக்க ஆரம்பித்தார்கள்.கிட்டத்தட்ட 40 வருடங்களாக அவர் சேர்ந்து நடிக்கவே இல்லை.
மீண்டும் சேர்ந்த தூண்கள்: அவர்களை சேர்த்து வைத்து படம் எடுக்க நடந்த முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன. சூழல் இப்படி இருக்க அவர்கள் மீண்டும் சேரவிருக்கிறார்கள் என்று கடந்த சில நாட்களாக தகவல்கள் பரவிக்கொண்டிருந்தன. ஆனால் அதில் ஒரு ட்விஸ்ட்டோடு அறிவிப்பு வந்தது. அதாவது கமல்ஹாசன் தயாரிக்க; ரஜினிகாந்த் நடிப்பார் என்று கூறப்பட்டது. இரண்டு பேரும் சேர்ந்து நடிக்காதது ஏமாற்றமாக இருந்தாலு; இதுவாவது நடந்ததே என்று ரசிகர்கள் நிம்மதியடைந்தார்கள்.

வெளியேறிய சுந்தர்.சி: இப்படத்தை கோலிவுட்டின் சீனியர் இயக்குநர்களில் ஒருவரான சுந்தர்.சி இயக்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான முதற்கட்ட வேலைகளையும் தொடங்கிவிட்டார்கள். ஆனால் உள்ளே என்ன நடந்ததோ தெரியவில்லை அவர் இயக்க முடியாது என்று சொல்லி வெளியேறிவிட்டார். இந்த கூட்டணி முறிவுக்கு காரணமாக பலரும் பல யூகங்களை சொல்கிறார்கள். உண்மையில் என்ன நடந்தது என்று சம்பந்தப்பட்டவர்களுக்கே வெளிச்சம்.
யார் இயக்குநர்?: சுந்தர்.சி வெளியேறியதை அடுத்து யார் இயக்குவார் என்று பலரிடம் கேள்வி இருக்கிறது. வெங்கட் பிரபு, நெல்சன் திலீப்குமார் என பலரின் பெயர்கள் அடிபட்டன. அதிலும் தனுஷிடம் கதை கேட்டதாகவும் சொன்னார்கள். ஆனால் பார்க்கிங் பட இயக்குநர் ராம்குமார் சொன்ன கதை பிடித்து போனதாகவும்; அதையே லாக் செய்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. மிக விரைவில் அதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரலாம் என்று சொல்கிறார்கள்.
யார் ஹீரோயின்?: பார்க்கிங் படத்துக்காக ராம்குமார் தேசிய விருது வென்றார் என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே அவர் இயக்கினால் கண்டிப்பாக தரமான சம்பவமாக இருக்கும் என்பது ரசிகர்களின் நம்பிக்கை. இந்நிலையில் அப்படம் பற்றி புதிய தகவல் ஒன்று வெளியாகியிருக்கிறது. அதாவது, இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க சாய் பல்லவியிடம் பேச்சுவார்த்தை நடந்ததாகவும்; ஏற்கனவே அமரன் படத்தில் கமலுடைய தயாரிப்பில் நடித்த அனுபவம் இருப்பதால் இதிலும் நடிக்க ஒத்துக்கொண்டார்; சம்பவளம் கோடி கணக்கில் வாங்கவிருக்கிறார் என்றும் விவரமறிந்தவர்கள் சொல்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











