தெலுங்கில் ரீமேக்காகும் அஜித் படம்.. மெகா ஸ்டாருக்கு தங்கச்சி ஆகப்போகும் ரவுடி பேபி?
சென்னை: தெலுங்கில் ரீமேக் ஆகும் அஜித் படத்தில் நடிகை சாய் பல்லவி மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கையாக நடிக்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
நடிகை சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பாலும் க்யூட்டான நடிப்பாலும் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளார்.
அண்மையில் தனது மருத்துவ படிப்புக்கான தகுதித் தேர்வை திருச்சியில் உள்ள தனியார் கல்லூரியில் எழுதினார். அப்போது அவரை அடையாளம் கண்ட ரசிகர்கள் அவருடன் செல்பிக்களை எடுத்துக் கொண்டனர்.

ரசிகர்களை கவர்ந்த நடிகை
பிரபல நடிகையாக இருந்த போதும் சிரித்த முகத்துடன் அனைவருடனும் சாய் பல்லவி செல்பி எடுத்தார். அதற்காக தனது மாஸ்க்கை கூட சில நிமிடங்கள் கழட்டினார். அவரது இந்த செயல்பாடு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது.

மெகா ஸ்டாருக்கு தங்கச்சி
இந்நிலையில் சாய் பல்லவி குறித்த ஒரு புதிய தகவல் சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. அதாவது நடிகை சாய் பல்லவி தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ள அஜித் படத்தில் நடிக்கவுள்ளார். அதில் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்கு தங்கச்சியாக நடிக்கவுள்ளார் என தெரிகிறது.

லக்ஷ்மி மேனன் ரோல்
அதாவது சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியான படம் வேதாளம். இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்தார். அஜித்துக்கு தங்கையாக லக்ஷ்மி மேனன் நடித்தார். இந்நிலையில் லக்ஷ்மி மேனன் கதாப்பாத்திரத்தில்தான் சாய் பல்லவி நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

சிரஞ்சீவி பிறந்தநாள்
பில்லா படத்தை இயக்கிய மெஹர் ரமேஷ் தான் வேதாளம் படத்தை ரீமேக் செய்யப் போகிறார் என்றும் தெரிகிறது. இந்தப் படம் குறித்த அறிவிப்பு நடிகர் சிரஞ்சீவியின் பிறந்தநாளான ஆகஸ்ட் 22ஆம் தேதியே வெளியாகும் என கூறப்பட்டது. ஆனால் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.
Recommended Video

இரட்டை வேடம்
சாய் பல்லவி தற்போது நாக சைதன்யாவுடன் ஒரு ரொமான்ட்டிக் படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை ஃபிடா படத்தை இயக்கிய சேகர் கம்முலா இயக்கி வருகிறார். அதே நேரத்தில் நடிகர் சிரஞ்சீவி ஆச்சார்யா என்ற படத்தில் நடிக்க உள்ளதாகவும் அதில் அவர் இரட்டை வேடத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











