தங்கை நிச்சயதார்த்தத்தில் குத்தாட்டம்.. ரவுடி பேபியாக ஆட்டம் போட்ட சாய் பல்லவி.. செம டிரெண்டிங்!
சென்னை: பான் இந்தியா நாயகியான சாய் பல்லவி, தனது தங்கை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்தத்தில் குத்தாட்டம் போட்ட வீடியோ டிரெண்டான நிலையில், அவரின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
தனியார் தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட உங்களில் யார் அடுத்த பிரபுதேவா போட்டியில் பங்கேற்றதன் மூலமாக சாய் பல்லவி தமிழ் சினிமா ரசிகர்களிடையே புகழ்பெற்றார். அந்த போட்டியில் மழை படத்தில் ஸ்ரேயா ஆடிய பாடலுக்கு சாய் பல்லவி ஆடிய போது, சிறப்பு விருந்தினராக வந்த நடிகர் சாந்தனு, நிச்சயம் ஹீரோயினாக வரப்போகிறார் என்று வாழ்த்தினார்.

சினிமாவில் சாதிக்கும் சாய் பல்லவி: அவர் சொன்னது போலவே மலையாள திரைப்படமான பிரேமம் மூலம் அறிமுகமான சாய் பல்லவி, ஒரே படத்தில் உச்சிக்கு சென்றார். அதன்பின் அவர் மலையாளம் மட்டுமல்லாமல், தெலுங்கு, தமிழ் படங்களிலும் நடிக்க தொடங்கினார். அதிலும் தெலுங்கு சினிமாவில் ராஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ் ஆகியோரை விடவும் சாய் பல்லவி அதிகளவில் ரசிகர்களை கொண்டவர்.
மருத்துவரான சாய் பல்லவி நடிப்பில் அசத்தி வருவதால், அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. அதேபோல் அவ்வப்போது சாய் பல்லவி தனது தங்கை பூஜா கண்ணனுடன் இன்ஸ்டாகிராமில் புகைப்படங்களை வெளியிட்டு வந்தார். இதனால் ரசிகர்களின் பார்வை அவரின் தங்கை பூஜா கண்ணன் மீது விழத்தொடங்கியது. அதன் பலனாக சில குறும்படங்களில் நடிக்க தொடங்கினார்.

பூஜா கண்ணன் நிச்சயதார்த்தம்: அதேபோல் சண்டை பயிற்சி இயக்குநர் ஸ்டண்ட் சில்வா இயக்கத்தில் வெளியான சித்திரை செவ்வானம் என்ற படத்தில் கதாநாயகியாகவும் பூஜா கண்ணன் நடித்தார். அந்த படம் ரசிகர்களிடையே பெரியளவில் வரவேற்பை பெறாததால், அவருக்கு அடுத்தடுத்து வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சில நாட்களுக்கு முன் பூஜா கண்ணன் தனது இன்ஸ்டாகிராமில் காதலர் என்று வினீத் என்பவரை அறிமுகம் செய்து வைத்தார்.
விரைவில் அவருடன் திருமணம் நடக்கவுள்ளதாக தடாலடி அறிவிப்பையும் வெளியிட்டார். சாய் பல்லவி சினிமாவில் பிஸியாக இருப்பதால், அவர் தற்போது திருமணம் செய்ய விரும்பாததால், தங்கைக்கு திருமணம் செய்ய குடும்பத்தினர் முடிவெடுத்ததாக தகவல் வெளி வந்தது. இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன் பூஜா கண்ணன் - வினீத் ஜோடிக்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது.

சாய் பல்லவி நடனம்: இதில் இரு குடும்பங்களின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். நிச்சயதார்த்த நிகழ்ச்சி முடிவடைந்த பின் குடும்பத்தினர் அனைவருடனும் இணைந்து சாய் பல்லவி நடனமாடி மகிழ்ந்தார். அந்த வீடியோக்கள் ட்ரெண்டான நிலையில், ரசிகர்கள் பலரும் சாய் பல்லவி க்யூட்டாக இருப்பதாக கமெண்ட் செய்து வந்தனர்.
இந்த நிலையில் நடிகை பூஜா கண்ணனின் நிச்சயதார்த்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதில் சாய் பல்லவியும் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இருக்கும் புகைப்படங்களும் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. மேலும் பூஜா கண்ணன் - வினீத் திருமண தேதி எப்போது என்ற கேள்வியும் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications











